Unlock 4 ஏன் முந்தைய அன்லாக் கட்டங்களை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது..!!

கொரோன பரவல் உச்ச கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், பல நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2020, 07:46 PM IST
  • அன்லாக் 4 க்கான வழிகாட்டுதலை உள்துறை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், பல மாநிலங்கள் மெட்ரோ ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்களை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவாக உள்ளன.
  • கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளிப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் பல பள்ளிகள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளின் மையங்களாக இருக்கின்றன.
Unlock 4 ஏன் முந்தைய அன்லாக் கட்டங்களை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது..!! title=

புதுடெல்லி:  கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் லாக்டவுன் விதிக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூன் மாதத்தில்  தொடங்கப்பட்ட அன்லாக் நடைமுறை தொடங்கியது. இப்போது, செப்டம்பர் 1 முதல் 4 வது கட்ட அன்லாக் நடவடிக்கைகள் தொடங்குகின்றன. ஆனால் முந்தைய மூன்று கட்டங்களை விட இது மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில், கொரோன பரவல் உச்ச கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், பல நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

தேர்வுகள் நிறைந்த மாதம்

செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை, நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வான ஜே.இ.இ (JEE) (மெயின்ஸ்) நடைபெறும்.  செப்டம்பர் 13, நீட்  (NEET) என்னும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவு நடைபெறும். இந்த இரண்டைத் தவிர, தேசிய அளவிலான தேர்வுகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தும். எனவே, செப்டம்பர் முதல் ஏராளமான நடவடிக்கைகள் திடீரென முழு வீச்சில் தொடங்க உள்ளது.

போக்குவரத்து தளர்வு

தேர்வுகள் ஒத்திவைக்கப்படாததாலும், இப்போது தேர்வுகள் ஒத்திவைக்க வாய்ப்பில்லை என்பதாலும், மூன்றாம் கட்ட அன்லாக் வரை குறைந்த அளவில் செயல்பட்டு வந்த பொதுப் போக்குவரத்து, மாணவர்களுக்கு உதவும் வகையில் முழு வீச்சில் இயங்க வேண்டும்.

ALSO READ | சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த கோரிக்கை..!!!

மெட்ரோ, உள்ளூர் ரயில்

அன்லாக் 4 க்கான வழிகாட்டுதலை உள்துறை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், பல மாநிலங்கள் மெட்ரோ ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்களை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவாக உள்ளன. இவை திறந்தவுடன், எல்லா எச்சரிக்கை நடவடிக்கைகளும் கடுமையாக பின்பற்றப்படுகிறதா  என்பதைக் கண்காணிப்பது மிக முக்கியம்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளிப்பது சாத்தியமில்லை. ஆனால்  பல பள்ளிகள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளின் மையங்களாக இருக்கின்றன. எனவே, செப்டம்பர் முதல் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும். நான்காம் கட்ட அன்லாக்கில் பள்ளி நிலைமை மாறும் 4. ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பணிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் பள்ளியிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுப்பார்கள். 

மாநில எல்லையில்  கட்டுப்பாடுகள் இல்லை

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், மாநில எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்ககூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு அல்லது சரக்கு போக்குவரத்திற்கு தடையிட கூடது என உள்துறை அமைச்சகம் கூறியது. செப்டம்பர் மாதம் முதல், எந்தவொரு தடையும் இல்லாமல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.

ALSO READ | JEE, NEET 2020: மருத்துவ, பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் என்ன ஆகும்..!!!

முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிக தொற்று எண்ணிக்கை

நாட்டில் தினமும் பதிவாகும் புதிய COVID-19  தொற்று பதிப்புகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.  இப்போது இந்தியாவின் COVID-19 தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இருப்பினும், குணமடையும் விகிதம் அதிகரித்துள்ளதாலும், இறப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டதால், நிலைமை அந்த அளவிற்கு மோசமாக இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது. 

Trending News