ஓடும் ரயிலுக்குள் தீ வைத்த சம்பவம்! தண்டவாளத்தின் அருகே 3 சடலங்கள்!

ஓடும் ரயிலுக்குள் ஒருவர் தீ வைத்த நிலையில் ரயில் தண்டவாளத்தின் அருகே மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2023, 08:34 AM IST
  • ரயிலை நிறுத்த பயணிகள் சங்கிலியை இழுத்தனர்.
  • ரயில்வே போலீசாரும் தீயணைப்பு படையினரும் காயமடைந்தவர்களை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.
  • இறந்தவர்களின் உடல்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டன.
ஓடும் ரயிலுக்குள் தீ வைத்த சம்பவம்! தண்டவாளத்தின் அருகே 3 சடலங்கள்! title=

கோழிக்கோடு: ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலத்தூர் ஸ்டேஷன் மற்றும் கொரபுழா பாலம் இடையே மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ரயிலுக்குள் நபர் தீ வைத்த போது வெளியே குதித்தவர்களின் சடலங்கள் இவை என கூறப்படுகிறது. விபத்து நடந்த பாலத்திற்கு அருகிலேயே ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர் கண்ணூரைச் சேர்ந்த பெண் என்றும் அவரது மருமகன் என்றும் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். ஆணின் உடல் அடையாளம் காணப்படவில்லை. நடைமுறைகள் முடிந்து இறந்தவர்களின் உடல்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டன.

ரயிலின் டி1 பெட்டியில் இருந்த மூன்று பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே போலீசாரும் தீயணைப்பு படையினரும் காயமடைந்தவர்களை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். பலத்த காயமடைந்த பிரின்ஸ் என்ற பயணி பேபி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைச்சேரியை சேர்ந்த அனில்குமார், அவரது மனைவி சஜிஷா, மகன் அத்வைத், தளிபரம்பைச் சேர்ந்த ரூபி, திருச்சூரைச் சேர்ந்த அஸ்வதி ஆகியோர் காயமடைந்தனர். மொத்தம், ஒன்பது பேர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | Chennai LIC: அண்ணா சாலை எல்ஐசியில் தீ விபத்து... சென்னையில் பரபரப்பு!

ரயிலை நிறுத்த பயணிகள் சங்கிலியை இழுத்ததையடுத்து தீயை மூட்டிய நபர் தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். நேரில் பார்த்த சாட்சியின்படி, தாக்குதல் நடத்தியவர் இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில்கள், சிவப்பு தொப்பி மற்றும் சட்டை அணிந்திருந்தார் என கூறப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜ்பால் மீனா கூறுகையில், குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் கொயிலாண்டி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது.

மேலும் படிக்க | திருச்செந்தூர்-சென்னை இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News