நொடிக்கு ஒரு செய்தியும் நிமிடத்திற்கு ஒரு நிகழ்வுமாக உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. நாடு, உலகம், விளையாட்டு, வாழ்வியல் என இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
1.மத்திய அரசின் 3 வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கங்கள் சனிக்கிழமை நாடு தழுவிய ‘சக்கா ஜாம்’ போராட்டத்தை நடத்தின. மூன்று மணி நேர சக்கா ஜாம் போராட்டத்தில், பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. சில இடங்களில் இது அமைதியான முறையிலும், சில இடங்களில் சில ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. காவல்துறை இதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. தில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
2. புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கும், பிரச்சனையை தீர்க்க முயன்று கொண்டிருக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் (OHCHR) அலுவலகம், ஒரு ட்வீட்டில் அமைதியான வகையில் கூட்டங்களை நடத்துமாறும் கருத்து வெளிப்பாட்டிற்கான உரிமைகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு வழிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
3. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராமல் இருப்பதை அமமுக உறுதி செய்யும் என தினகரன் கூறியுள்ளார். மேலும், வி.கே.சசிகலா (Sasikala) கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதால் தனது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமமுக தலைவர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். மேலும் தனது அத்தை தொடர்ந்து அவரது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவார் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
4. COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சென்னையின் உயிர்நாடியான புறநகர் ரயில் சேவை, இயல்புநிலை முழுமையாக திரும்பியவுடனேயே வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டிக்கெட் கவுண்டர்கள் குறைவாக இருப்பதால் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கும் பிரச்சனையும், வழக்கமான பயணிகளுக்கான சீசன் பாஸ் பிரச்சனையும் சாதாரண சேவை மீண்டும் தொடங்கப்பட்டதும் தீர்க்கப்படும் என்றும் கூறப்படுள்ளது.
5. மியான்மாரில் ஆங் சான் சூ கி-யை (Aung San Suu Kyi) விடுவிக்கக் கோரியும், தற்போதுள்ள அரசியல் பதட்ட நிலையை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கினர். கலவரம் பரவாமல் தடுக்க அங்கு இணைய சேவை முடக்கப்பட்டது. வீதியில் இறங்கிய மக்கள் “இராணுவ சர்வாதிகாரி ஒழிக, ஜனநாயகம் வாழ்க” என கோஷம் எழுப்பினர். போராட்டக்காரர்களுக்கு வீதிகளில் மக்கள் உணவும் தண்ணீரும் அளித்து உதவினர்.
ALSO READ: Driving License: இங்கு பயிற்சி பெற்றால் ‘டெஸ்ட்’ இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்
6. சர்வதேச அமைப்பை துஷ்பிரயோகம் செய்ததற்கு அமெரிக்கா சீனாவைப் பொறுப்பேற்க வைக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் கூறினார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங்க் ஜீச்சியுடன் பேசிய அவர், சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். இரு தலைவர்களும் வெள்ளிக்கிழமை பேசினர் என தெரிய வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனவரி 20 அன்று பதவியேற்ற பின்னர் உயர் அதிகாரிகளுக்கு இடையில் நடக்கும் முதல் உரையாடல் இதுவாகும்.
7. சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் எடுத்து, அபாரமாக ஆடினார். இந்திய பந்துவிச்சாளர் நதீம் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.
8. Indian Railway Recruitment 2021: இந்திய ரயில்வே (Indian Railway) ஆட்சேர்ப்பு பிரிவில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2021), இன்று முதல், அதாவது 06 பிப்ரவரி 2021 இந்திய ரயில்வே rrccr.com இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், . இந்த பதவிகளுக்கு 2021 மார்ச் 05 அல்லது அதற்கு முன் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல், காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, விரைவில் விண்ணப்பிக்கவும்.
9. SBI-யின் புதிய விதிகளின்படி, உங்கள் கணக்கில் உள்ள தொகையை விட பெரிய தொகையை நீங்கள் SBI ஏடிஎம்மில் இருந்து எடுக்க முயற்சித்தால், ரூ .20 அபராதம் மற்றும் GST செலுத்த வேண்டும். நீங்கள் தெரியாமல் இந்த தவறை செய்தாலும், இந்த அபராதத்தை கட்டிதான் ஆகவேண்டும். குறைந்த இருப்பு தவிர மற்ற எந்த காரணங்களினால் பரிவர்த்தனை தோல்வியுற்றாலும் SBI கட்டணம் வசூலிக்காது.
10. IRCTC Online Bus Booking: இதுவரை நீங்கள் இந்தியன் ரயில்வேயின் பிரிவான IRCTC-யில் இருந்து ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறீர்கள். ஆனால் இப்போது இந்த வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் பேருந்தும் முன்பதிவு செய்யலாம். IRCTC (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன்) இந்த வசதியை ஜனவரி 29 முதல் தொடங்கியுள்ளது. ஒரு ஊடக செய்தியின்படி, IRCTC தனது ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையை நாட்டிற்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC மொபைல் செயலியில் இந்த சேவையின் ஒருங்கிணைப்பை மார்ச் முதல் வாரத்தில் IRCTC நிறைவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொபைல் போன்கள் மூலம் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ALSO READ: அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி LTC வவுச்சர்களுக்கு வரி இல்லை..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR