நான் தான் மகாராஷ்டிராவின் முதல்வர்; 50-50 சூத்திரத்துக்கும் இடமில்லை: பத்னாவிசு

மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக இருப்பேன் என்று தேவேந்திர பத்னாவிசு கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 29, 2019, 02:49 PM IST
நான் தான் மகாராஷ்டிராவின் முதல்வர்; 50-50 சூத்திரத்துக்கும் இடமில்லை: பத்னாவிசு title=

மும்பை: பாஜக-சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் (Maharashtra Assembly Elections 2019) தெளிவான பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையில், மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக இருப்பேன் என்று கூறியுள்ளார். புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 50-50 சூத்திரம் பற்றி ஒருபோதும் சிவசேனாவுடன் விவாதிக்கப்படவில்லை என்பதையும் தேவேந்திர பத்னாவிசு தெளிவுபடுத்தி உள்ளார். 

மேலும் பேசிய அவர், சாம்னா பத்திரிக்கையில் சிவசேனா எழுதிய கட்டுரை குறித்து 100 சதவீதம் கோபமாக இருக்கிறோம் எனக் கூறியவர, பாஜக-விசாம் "பி" திட்டம் என்று எதுவும் இல்லை என்றும், எங்களிடம் பிளான் "ஏ" மட்டுமே உள்ளது, வேறு எந்த திட்டமும் இல்லை என்றும் கூறினார். "பி" பிளான் மூலம் சிவசேனாவை தவிர்த்து ஆட்சி அமைக்க உள்ளோம் என்ற செய்தியில் உண்மை இல்லை. பாஜக-சிவசேனா கூட்டணி அரசாங்கம் தான் மாநிலத்தில் அமையும் என்று முதல்வர் தேவேந்திர பத்னாவிசு தீபாவளியன்று செய்தியாளர்களுடன் உரையாடலில் இந்த விஷயங்களை கூறினார்.

இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி குறித்து நாங்கள் ஒருபோதும் முடிவு செய்யவில்லை என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் அரசாங்கம் அமைக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் முதல்வராக இருப்பேன், அது குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஊதுக்குழலான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதைப் பற்றி விவாதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவர் கூறினார். ஆட்சியில் சிவசேனாவுக்கு எந்த துறைகள் வழங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இரு கட்சிகளும் விவாதிக்கப்படும்போது, ​​அதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

சிவசேனா சாம்னா பத்திரிக்கையில் எழுதப்பட்டதைப் பற்றி, எங்களுக்கு 100 சதவீதம் அதிருப்தி இருப்பதாகக் கூறினார். எங்களுக்கு எதிராக எழுதுபவர்கள், ​​காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணிக்கு எதிராக அதே பலத்துடன் எழுதுவதைக் காட்டுங்கள் என கோவமாகக் கூறினார்.

Trending News