15 பேருக்கு மரண தண்டனை... பாஜக தலைவர் கொலை வழக்கு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

Kerala Court Verdict on Ranjith Sreenivasan Murder Case in Tamil: பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஆழப்புழா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 30, 2024, 03:48 PM IST
  • ரஞ்சித் ஸ்ரீனிவாசன் 2021ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
  • இதன்பின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது.
  • கடந்த ஜன. 20ஆம் தேதி இவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது.
15 பேருக்கு மரண தண்டனை... பாஜக தலைவர் கொலை வழக்கு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு title=

Kerala Court Verdict on Ranjith Sreenivasan Murder Case News in Tamil: கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில், பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் 2021ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார்.  அதாவது, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அன்று, பாஜக ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளரான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், அவரது வீட்டில் தாய், மனைவி, மகள் என அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார்.

கொலை பின்னணி

கொடூர கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஜான் கொலைக்கு பழிக்குப் பழியாக ரஞ்சித் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆலப்புழா பார் கவுன்சிலில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞரும், மாவட்டத்தில் பாஜகவின் பிரபலமான பிரமுகராகவும் ரஞ்சித் இருந்துள்ளார். எனவே, இவரின் கொலை சம்பவம் மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுக்க பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இவரது வழக்கில், தற்போது தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 15 பேரும் குற்றவாளி என கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஆழாப்புழா நீதிமன்றம் உறுதி செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு!

15 பேருக்கும் தூக்கு தண்டனை

குற்றம் நிரூபணமான 15 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆழப்புழாவின் மாவேலிக்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்துல் கலாம் என்கிற சலாம், நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம், சஃபரூதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி பூவத்துங்கல், மற்றும் ஷெர்னாஸ் அஷ்ரப் ஆகியோரை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

பாஜக தலைவரின் கொலைச் செயலில் நேரடியாக பங்கேற்ற முதல் எட்டு குற்றவாளிகள், பிரிவுகள் 302 (கொலை), 149 (சட்டவிரோத கூட்டம்), 449 (மரண தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ய வீட்டில் அத்துமீறி நுழைதல்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) மற்றும் 341 ஆகியவை பதிவு செய்யப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுமார் 9 முதல் 12 பேர் வரை, கொலையாளிகள் குற்றத்தைச் செய்தபோது, ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் வீட்டிற்கு வெளியே பயங்கர ஆயுதங்களுடன் காவலுக்கு நின்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், பிரிவுகள் 302 r/w 149 மற்றும் 447 (குற்றவியல் அத்துமீறல்) ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. 

ஏன் தூக்கு தண்டனை?

முன்னதாக வழக்கு விசாரணையின் போது, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்திடம் அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்தது. குற்றவாளிகள் ஒரு 'பயிற்சி பெற்ற கொலையாளிப் படை' என்றும், பாதிக்கப்பட்டவர் அவரது தாய், கைக்குழந்தை மற்றும் மனைவிக்கு முன்னால் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. மேலும், இதனை அரிதினும் அரிதான குற்றமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வாதிட்டது. 

இந்தியாவில் குற்றத்தின் கொடூரம், சித்ரவதை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்க இடமின்றி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தூக்கு தண்டனை என்பது விதிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் ஒரே தீர்ப்பில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரே வழக்கில் அதிகமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளில் இது டாப் 3ல் இடம்பிடித்துள்ளது.

மேலும் படிக்க | Bihar Politics: பீகாரில் ஒன்பதாவது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்பு...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News