TCS, Infosys, Wipro Recruitment Drive 2022: TCS, Infosys, Wipro ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிரெஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கூடிய இந்த வேலைவாய்ப்பு பிரஷ்ஷர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இந்த ஆண்டு ஐடி துறையில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பிரஷ்ஷர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஐடி ஜாம்பவான் நிறுவனங்களான TCS, Infosys, Wipro ஆகியவை இந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளன.
இந்த பெரிய நிறுவனங்கள் கடந்த 2021 ஆண்டும், அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கினர். மூன்று ஐடி ஜாம்பவான்களும் 2021 ஆம் ஆண்டு சாதனையாக 1.7 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு 31,000 பேர் மட்டுமே பணியர்மர்த்தப்பட்டனர். தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு டிஜிட்டல் பயன்முறைக்கு மாறுவதால், இத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
FY22 ஆண்டில் 55,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. 2021 டிசம்பரில் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளை அறிவிக்கும் போது நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. "திறமை மேம்பாட்டில் செய்ய்ப்படும் முதலீடுகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம், மேலும் எங்களின் வளர்ச்சி நோக்களை எட்டும் வகையில், FY22 ஆம் ஆண்டில் 55,000 க்கும் அதிகமான பிரஷ் பட்டதாரிகளை பணியமர்த்தல் திட்டம் உள்ளது" என்று இன்ஃபோசிஸின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் கூறினார்.
அதே போன்று 2022 ஆம் ஆண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்தும் திட்டத்தை மேற்கொள்ள இருப்பத்தாக அறிவித்துள்ளது. இருப்பினும், எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை கொடுக்கவில்லை.
TCS சமீபத்தில் 2,00,000 பணியாளர்களுடன், புதிய மைல்கல்லைத் எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொழிலாளர் எண்ணிக்கையில் டிசிஎஸ் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. முன்னதாக, டிசிஎஸ் மார்ச் மாதத்திற்குள் 34,000 புதியவர்களை பணியமர்த்துவதாக அறிவித்தது. ஆனால் அந்த இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது.
விப்ரோ நிறுவனம் 30,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த உள்ளது. புதன்கிழமை, விப்ரோ FY23 ஆண்டில் சுமார் 30,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியது. ஆட்சேர்ப்பு நடவடிக்கை பற்றி பேசுகையில், அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், சிறப்பான நிர்வாகம் மற்றும் சேவையை உறுதிப்படுத்த எடுக்கப்படும் முயற்சிப்பதாக, இந்த ஆட்சேர்ப்பு நடாவடிக்கை இருக்கும் என நிறுவனம் கூறியது.
இது குறித்த விவரங்களை அளித்த, விப்ரோவின் தலைவர் மற்றும் CHRO சௌரப் கோவில், நிறுவனம் 2023 நிதியாண்டில் 30,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த உள்ளதாகவும், FY22 ஆண்டில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 17,500 ஆக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், விப்ரோ, முந்தைய ஆண்டை விட FY22 ஆண்டில், கேம்ப்ஸ் இண்டர்வ்யூ மூலம், நிறுவனத்திற்கான மொத்த காலியிடங்களில், 70 சதவிகித அதிகமான அளவிற்கு பிரஷ்ஷர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ALSO READ | 7th Pay Commission: ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் பரிசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR