அமித் ஷா பேரணிக்கு அனுமதி மறுப்பு: மே.வங்காளத்தில் மம்தாவின் சர்வாதிகாரம் -பாஜக

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், "வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் சர்வாதிகாரம் நடக்கிறது எனக் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2019, 02:22 PM IST
அமித் ஷா பேரணிக்கு அனுமதி மறுப்பு: மே.வங்காளத்தில் மம்தாவின் சர்வாதிகாரம் -பாஜக title=

புதுடில்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், இதுவரை ஆறு கட்ட தேர்தல் முடிந்துள்ளது. கடைசி கட்டமான ஏழாவது கட்டத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி 59 தொகுதிகளுக்கு எட்டு மாநிலங்களில் நடக்க உள்ளது. அதில் ஒரு மாநிலம் மேற்கு வங்காளம். அங்கு 9 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடக்க உள்ளது.

இதனால் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஜாதவ்பூர் உட்பட சில இடங்களில் இன்று (திங்கள்கிழமை) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பிரமாண்டமான தேர்தல் பேரணியில் கலந்துக்கொள்ள இருந்தார். ஆனால் இந்த பேரணி நடத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும், ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், "வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் சர்வாதிகாரம் நடக்கிறது. இன்று ஜாதவ்பூரில் அமித்ஷா ஜி-யின் பேரணி நடக்க இருந்தது. 4-5 நாட்களுக்கு முன்பு நாங்கள் அதற்கு அனுமதி கேட்டிருந்தோம். முதலில் அவர்கள் அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் தீடிரென நேற்று இரவு 8.30 மணியளவில் அனுமதி கிடையாது எனக் கூறினார்கள்

"அதேபோல முதலில் ஹெலிகாப்டருக்கு அனுமதி கொடுகப்பட்டது. பின்னர் நேற்று இரவு மறுக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். தலைவர்கள் பேரணிகளில் ஈடுபடாமல் செய்தால் எப்படி பிரச்சாரம் செய்வது. தேர்தல் நடத்தி என்ன பயன்? இது சர்வாதிகாரமாக உள்ளது. இது தேர்தல் கமிஷனின் விதிகளை மீறுவதாகும். 

Trending News