ஒரு எழுத்தால் மாறிய வரலாறு! அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூட்டம்!

அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்க இருப்பதாக மேற்குவங்க ஆளுநர் தன்கர் பதிவிட்ட கருத்தால் சலசலப்பு.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2022, 04:30 PM IST
ஒரு எழுத்தால் மாறிய வரலாறு! அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூட்டம்! title=

மேற்கு வங்க சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 7ம் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்கு தொடங்கும் என்கிற கடிதத்தில் கவர்னர் ஜக்தீப் தன்கர் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பி இருக்கிறார்.  இந்த பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூட்டம் நடப்பது என்பது அசாதாரணமானது மற்றும் வரலாற்றில் அதிசயமான நிகழ்வு, ஆனால் இது அமைச்சரவை எடுத்த முடிவு" என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 17 அன்று ஆளுநருக்கு மாநில அரசு அனுப்பிய கடிதத்தில் மார்ச் 7-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சட்டமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.  "அரசியலமைப்புச் சட்டத்தின் 166(3)வது பிரிவின் படி அமைச்சரவையின் பரிந்துரையை அடிப்படையாக கொண்டு ஆளுநர் சட்டசபையை கூட்டியதால், அரசியலமைப்பு இணக்கத்திற்காக இந்த பரிந்துரை திரும்பப் பெறப்பட்டது" என்று ஜக்தீப் தன்கர் பிப்ரவரி 19 அன்று ட்வீட் செய்திருந்தார்.

JagdeepDhankhar

மேலும் படிக்க | உ.பி., தேர்தல்: 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா

அதனையடுத்து நடந்த சில குளறுபடிகளால் தகவல் பரிமாற்றத்தின் போது டைப்பிங்கில் ஏற்பட்ட பிழையால் சட்டசபை கூட்ட தொடருக்கான நேரம் மதியம் 2 மணியில் இருந்து அதிகாலை 2 மணியாக மாறியது.  இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வங்காள தலைமை செயலாளரை கவர்னர் அழைத்தார்.   "நள்ளிரவுக்குப் பிறகு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்கிற அறிவிப்பில் உள்ள பிழையை கண்டறிந்த பிறகு அவசர ஆலோசனை நடத்த தலைமை செயலாளரை அவசரமாக அழைத்து இருக்கிறேன்"  என்று தன்கர் ட்வீட் செய்துள்ளார்.

தலைமைச் செயலாளர் வராமல் இருந்ததால் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இது வழக்கமான இணக்க தோல்வி' என்று பதிவிட்டார்.  ஆளுநரின் ட்வீட் குறித்து பேசிய பெங்கால் சபாநாயகர் விமன் பானர்ஜி கூறுகையில், 'அதிகாலை 2 மணி என்பது டைப்பில் ஏற்பட்ட தவறு, அந்த தவறை ஆளுநர் திருத்தியிருக்கலாம்.  ஆனால் அவர் அதனை செய்யாததால் , இப்போது நள்ளிரவுக்குப் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.  அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட முதல் இரண்டு கடிதங்களில் சட்டசபை கூட்டம் மதியம் 2 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் தவறு நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜக்தீப் தன்கருடன் தொலைபேசியில் பேசி, பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு புதிய நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.  இருப்பினும் அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெற்றால் இதுவே வரலாற்றில் முதன்முதலாக நடக்கும் சட்டசபை கூட்டம் ஆகும்.

மேலும் படிக்க | மேற்கு வங்க சட்டசபை முடக்கம்; ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News