புதுடெல்லி: டெல்லி காவல்துறை தலைநகரில் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது. இன்று ஜந்தர் மந்தரில் ‘கிசான் பஞ்சாயத்து’ போராட்டத்தை விவசாயிகள் தொடங்கவுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால அமர்வின் போது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த விவசாய சங்கங்களுக்கு புதன்கிழமை அனுமதி கிடைத்துள்ளது.
டெல்லியின் (Delhi) சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், டெல்லியின் மையப்பகுதியில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 போராட்டக்காரர்கள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வேளான் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு (Farmers Protest) தலைமை தாங்கி வரும் விவசாயிகள் அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவிடம் (SKM), அனைத்து கோவிட் -19 விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் எதிர்ப்பு போராட்டம் அமைதியானதாக இருக்கும் என்றும் உறுதிமொழி கேட்கப்பட்டது.
ALSO READ: போராட்டம் என்ற பெயரில் சாலைகளை ஆக்கிரமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம்
சிங்கு எல்லையில் இருந்து பேருந்துகள் மூலம் நியமிக்கப்பட்ட போராட்ட இடத்திற்கு டெல்லி காவல்துறை விவசாயிகளை அழைத்துச் செல்லும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. காவல்துறை மீண்டும் மாலை 5 மணிக்கு அவர்களை திரும்ப அழைத்துச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பி.கே.யு தலைவர் ராகேஷ் உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை குறைக்க போராட்ட இடங்களுக்கு அருகிலுள்ள சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
தங்கள் தலைவர் சுக்கி நஞ்சுடாவாமி தலைமையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு விவசாயிகள் குழு புதன்கிழமை காசிப்பூர் எல்லையை அடைந்து, நடந்துகொண்டிருக்கும் இயக்கத்திற்கான தங்கள் ஒற்றுமையைக் காட்டினர்.
நவம்பர் 2020 முதல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் (Farmers) டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் சில கோரிக்கைகளுடன் முகாமிட்டுள்ளனர். புதிய வேளான் மசோதாக்களை அரசாங்கம் திருமப்பப் பெற வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. இந்த வேளான் சட்டங்கள் விவசாயிகள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுவரை அரசாங்கம் விவசாயிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டது. இந்த வேளான் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானவை என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. இன்னும் இதில் எந்தவித முடிவையும் இரு தரப்பும் எட்டவில்லை.
ALSO READ: மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு வேளான் சட்டங்களை இடைநிறுத்த வேண்டும்: பாபா ராம்தேவ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR