உபி-யை அடுத்து அஹமதாபாத் பெயரினை மாற்ற விரும்பும் குஜராத்!

பாஸியாபாத் நகரம் இனி அயோத்தியா என அழைக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் அறிவித்த சில மணி நேரங்களில் தற்போது குஜராத்தின் அஹமதாபாத் நகரம் கர்ணாவதி என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2018, 12:47 PM IST
உபி-யை அடுத்து அஹமதாபாத் பெயரினை மாற்ற விரும்பும் குஜராத்! title=

பாஸியாபாத் நகரம் இனி அயோத்தியா என அழைக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் அறிவித்த சில மணி நேரங்களில் தற்போது குஜராத்தின் அஹமதாபாத் நகரம் கர்ணாவதி என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்!

குஜராத்தின் காந்திநகர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் நிதின் படேல், ஆளும் பாஜக அரசு அஹமதாபாத் பெயரினை மாற்ற விரும்புகிறது. சட்டரீதியாக அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நிச்சையம் பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அயோத்தியாவில் தீபாவளியினை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்திர பிரிதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள்., உபி-யின் பாஸியாபாத் நகரம் இனி அயோத்தியா என அழைக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, "அயோத்யா என்பது நமது அடையாளம். அது நமது பெருமை. கடவுள் ராமரின் அடையாளத்தை அது சுமந்து நிற்கிறது. எனவே அவரின் பெருமை என்றென்றும் நிலை நிறுத்த, இன்றிலிருந்து பாஸியாபாத் அயோத்யாவாக அழைக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அலகாபாத் நகரத்தின் பெயரினை பிரயாக்ராஜ் என்று மாற்றி யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் யோகி ஆதியத்நாத்தின் அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த பெயர் மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் தோஷி தெரிவிக்கையில்... பாஜக ஆளும் மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வரும் பெயர் மாற்றங்கள் அனைத்தும் தேர்தல் யுக்திகளில் ஒரு பகுதியாகும். அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதும், இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயர்களை இந்து பெயர்களாக மாற்றுவதும் இந்துக்களின் ஓட்டுகளை வாங்க முயற்சித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Trending News