சாதனை!! பார்வை இல்லா மாணவி ஐஐஎம்-மில் இடம் பிடித்தார்!

Last Updated : Apr 11, 2017, 01:08 PM IST
சாதனை!! பார்வை இல்லா மாணவி ஐஐஎம்-மில் இடம் பிடித்தார்! title=

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் பிராச்சி சுக்வானி பிறப்பிலே மக்குலார் தேய்வு என்ற பார்வை குறைபாடு இருந்துள்ளது. இவர் 3-ம் வகுப்பு படிக்கும் போதே 80 சதவீதம் பார்க்கும் திறனை இழந்துள்ளார்.

இந்தநிலையிலும் தன்னுடைய முயற்சியால் பி.பி.ஏ பட்டம் பெற்றார். அதன் பின் ஐஐஎம்-மில் படிக்க வேண்டும் என்பதற்காக, கேட் நுழைவுத் தேர்வையும் எழுதினார்.

அதில் அவர் 100 க்கு 98.55 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கேட் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், அவருக்கு மூன்று சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தது.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். அதன் பின் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும். அதைத் தொடர்ந்து பார்வையற்றவர்களுக்காக ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Trending News