நாவர்டீஸ் நிறுவன பங்குகளை வாங்குவதற்காக நிதி திரட்ட, ஹார்லிக்ஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மிக பிரபலமான ஊட்டச்சத்து பானமான ஹார்லிக்ஸ், இங்கிலாந்தை சேர்ந்த கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் (GSK) நிறுவனத்தின் தயாரிப்பு.
இது 1843-ம் ஆண்டில் வில்லியம் மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பானம், உலகம் முழுக்க பிரபலமானது. 2-ம் உலகப்போரின் போது மிட்டாய் மற்றும் மாத்திரைகளாக இது போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுக்கு மேல் கடந்த இந்த பானம் இங்கிலாந்து மட்டுமின்றி, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்கதேசம் ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது.
ஸ்மித்கிளைன் நிறுவனமானது உலக அளவில் சுகாதார சந்தையில் நாவர்டீஸ் நிறுவனஙத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக நிதி திரட்ட, தனது பாரம்பரிய தயாரிப்பான ஹார்லிக்கை விற்க முடிவு செய்துள்ளது. அதாவது ஏறக்குறைய 72.5 சதவீத ஹார்லிக்ஸ் பங்குகளை விற்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஸ்மித்கிளைன் நிறுவனத்துக்கு உலக அளவில் 2-வது பெரிய சந்தை இந்தியா தான். மருந்து தயாரிப்பில் பிரபலமான நாவர்டீஸ் நிறுவனம், நுகர்வோர் உடல்நல தயாரிப்புகளில் தன்னிடம் உள்ள 36.5 சதவீத பங்குகளை ஸ்மித் கிளைன் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அந்த நிறுவனமும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சுமார் 1300 கோடி டாலருக்கு நாவர்டீஸ் பங்குகள் கைமாற உள்ளன.
இதனால் இந்தியாவில் GSK-வின் ரூ.4,421 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனையில் மட்டும் சுமார் ரூ.5.500 கோடி வருமானம் வருகிறது. இதில் எண்ணிக்கை அடிப்படையில் 65 சதவீதமும் மதிப்பு அடிப்படையில் 56.3 சதவீதமும் ஹார்லிக்ஸ் கோலோச்சுகிறது என கடந்த ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரம் ஒன்று தெரிவித்தது.
பல்லாண்டு வரலாற்றைக் கொண்ட இந்த பானத்துடன் போர்ன்விட்டா, காம்ப்ளான், மைலோ உள்ளிட்ட ஊட்டாத்து பானங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஹார்லிக்ஸ் நிறுவனத்தை விற்கும் GSK-வின் இந்த முடிவால் இந்த நிறுவன பங்கின் இந்திய சந்தை மதிப்பு சரிவை சந்தித்தது.
ஹார்லிக்ஸ் இந்தியாவில் உற்பத்தி செய்ய முதல் தொழிற்சாலை பஞ்சாப்பில் 1958. 2-வதாக ஆந்திராவிலும் துவங்கப்பட்டது என்பது குறிபிடதக்கது.