கோட்சே ஒரு தேசபக்தர் என்ற கருத்துக்கு பிரக்யா விளக்கமளிக்க EC உத்தரவு!

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்ற பிரக்யாசிங் தாகூர் பேச்சுக்கு அவர் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது!!

Last Updated : May 17, 2019, 10:19 AM IST
கோட்சே ஒரு தேசபக்தர் என்ற கருத்துக்கு பிரக்யா விளக்கமளிக்க EC உத்தரவு! title=

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்ற பிரக்யாசிங் தாகூர் பேச்சுக்கு அவர் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது!!

அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் எனவும், அவர் காந்தியை சுட்ட நாதுராம் கோட்சே எனவும் பேசினார். கமல்ஹாசனின் இந்த பேச்சு நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய பிரதேச மாநில பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் பதிலளிக்கும் வகையில் பேசினார். அதில், நாதுராம் கோட்சே அன்றும் இன்றும் என்றும் தேசபக்தர் தான் என தெரிவித்தார். இதையடுத்து பிரக்யா சிங்கின் நாதுராம் கோட்சே குறித்த பேச்சுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுமென மகாராஷ்டிரா தேர்தல் ஆணையருக்கு, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கருத்து தெரிவித்தார். இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், பிரக்யா சிங்கின் பேச்சில் பாஜகவிற்கு உடன்பாடில்லை என்றும் பாஜக தலைமை தெரிவித்தது. இதையடுத்து தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது எனவும் தனது பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல் காந்தி நாட்டிற்காற்றிய சேவையை அளப்பரியது எனவும் தெரிவித்தார்.

 

Trending News