கோவா அரசில் திடீர் திருப்பம்; துணை முதல்வர் சுதின் தாவில்கர் நீக்கம்!

அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக கோவா துணை முதல்வர் சுதின் தாவில்கர் பதவி பறிக்கப்பட்டது!

Last Updated : Mar 27, 2019, 05:26 PM IST
கோவா அரசில் திடீர் திருப்பம்; துணை முதல்வர் சுதின் தாவில்கர் நீக்கம்! title=

அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக கோவா துணை முதல்வர் சுதின் தாவில்கர் பதவி பறிக்கப்பட்டது!

கோவா மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தாவில்கர் அவர்களை மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார் கோவா முதல்வர் ப்ரமோத் ஷாவன்ட்.

கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த 3 MLA-க்களில் 2 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் நள்ளிரவில் இணைந்தனர்.

இவர்கள் பாஜக-வில் இணைந்ததை சபாநாயகர் நள்ளிரவில் ஏற்றுக்கொண்டார். இந்த கட்சியின் ஒரு MLA, முதல்வர் பதவிக்காக பிரச்சினை செய்து நிலையில் துணை முதல்வர் பதவி பெற்றார். தற்போது இக்கட்சியில் இருந்து இரு MLA-க்கள் பாஜக-வில் இணைந்ததால், துணை முதல்வராக இருக்கும் சுதின் தாவில்கர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவா முதல்வர் ப்ரமோத் ஷாவன்ட் தெரவிக்கையில்., "நாங்கள் கூட்டணி பலத்தால் தான் ஆட்சி அமைத்துள்ளோம், எங்கள் கூட்டசியில் இருக்கும் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை மதிக்கின்றோம். ஆனால் அக்கட்சியின் தலைவர் சுதின் தாவில்கர் சகோதரர் தீபக் தாவில்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சிரோட் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றார். நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தீபக் பின்வாங்கவில்லை. கட்சியின் உத்தரவை மீறி செயல்படுவதால் அவரது மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மிருதுளா சின்ஹா-விற்கு தெரிவித்துள்ளார் முதல்வர் ப்ரமோத் ஷாவன்ட். மேலும் அமைச்சரவையில் இருந்தும் சுதின் தாவில்கர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் காலியாக இருக்கும் துணை முதல்வர் பதவி நிறப்பப்படும் எனவும் ப்ரமோத் ஷாவன்ட் தெரிவித்துள்ளார்.

Trending News