பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகா உட்பட தேசிய அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட கவறி லங்கேஷுக்கு நக்ஸலைட்டுகளிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்ததாக அவரின் சகோதரர் இந்த்ரஜித் கூறியுள்ளார்.
கவுரி லங்கேஷ் நக்ஸலைட்டுகளை மனம் மாற்றி சாதாரண வாழ்க்கையில் ஈடுபடவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். சமீபத்தில், நக்ஸலைட் குழுவிலிருந்து இருவர் விலகி வரக் காரணமாக கவுரி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், நக்ஸலைட்டுகளிடமிருந்து அவருக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இதுகுறித்து என்னிடமோ, சகோதரியிடமோ கூறியதில்லை. எனவே, போலீஸார் இந்தக் கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நக்ஸலைட்டுகளுடன் கவுரி தொடர்பில் இருந்தது, சகோதரர் இந்த்ரஜித்துக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கவுரிக்கும் வெளியீட்டாளராக இருந்த சகோதரர் இந்த்ரஜித்துக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
லங்கேஷ் பத்திரிகையில் இருந்து வெளியேறிய அவர், தன் பெயரில் 'கவுரி லங்கேஷ்' பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். மனதில் பட்டதை ஆணித்தரமாக எழுதுவதை வழக்கமாகக்கொண்டவர்.
கொலை நடந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், கொலையாளி ஹெல்மெட் அணிந்து வந்து துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.