முதல்வர் பூபேந்திர படேல்: 3.01 லட்சம் கோடி பட்ஜெட்டை குஜராத் அரசு தாக்கல் செய்தது. இதில், மாநில மக்களுக்கு புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை. குஜராத் மாநில நிதி அமைச்சர் கனு தேசாய் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய பாஜக அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன, அவற்றில் சில பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் ஆகும்.
காப்பீட்டு வரம்பு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
பட்ஜெட்டின் போது, தகுதியான குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய-மா அமிர்தம் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டு காப்பீட்டு வரம்பை 10 லட்சமாக இரட்டிப்பாக்க அறிவிக்கப்பட்டது. இதனுடன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 2023-24க்கான மதிப்பீடுகள் ரூ.916.87 கோடி உபரியாக இருப்பதாக நிதி அமைச்சர் தேசாய் தெரிவித்தார். பட்ஜெட் ஒதுக்கீட்டில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் இது முந்தைய ஆண்டை விட 23.38 சதவீதம் அதிகமாகும் ஆகும்.
மேலும் படிக்க | 2024 ஆம் ஆண்டு பெரிய சவாலாகவும், நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் -காங். தலைவர் கார்கே
புதிய வரி விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை
அதேபோல் பட்ஜெட்டில் புதிய வரி விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (ஜிஎஸ்டிபி) ரூ.42 லட்சம் கோடியாக உயர்த்த மாநில அரசு இலக்கு வைத்துள்ளதாக தேசாய் கூறினார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குஜராத் அரசு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கும் என்று அவர் கூறினார்.
இது தவிர, குஜராத்தில் ரூ.1,500 கோடி செலவில் ஐந்து நெடுஞ்சாலைகள் அதிவேக வழித்தடங்களாக உருவாக்கப்படும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வீடுகள் வழங்க குஜராத் அரசு அடுத்த ஆண்டு 1,066 கோடி ரூபாய் செலவழிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அதானி குழுமம் விவகாரத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ