எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; எந்த சேதமும் இல்லை!

கான்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!!

Last Updated : Aug 28, 2019, 09:38 AM IST
எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; எந்த சேதமும் இல்லை! title=

கான்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மத்திய ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

இதையடுத்து அந்த பெட்டிகளில் உள்ள பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவிதமான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படவில்லை.

முன்னதாக, நேற்று நள்ளிரவில் கான்பூர் அருகே உள்ள ரூமா கிராமத்தில், ஹவுரா-புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், 15 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு மீட்பு ரெயில் அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்து காரணமாக பிரதான பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Trending News