முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அபாயகரமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகயிள்ளது. குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் AIIMS சென்று அவரை காண இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) டெல்லியில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அருண் ஜெட்லி ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. உடல் நிலை குறைவு காரணமாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் காலை 11 மணியளவில் ஜேட்லியை காண AIIMS செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அருண் ஜெட்லி. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர். அண்மைக்காலமாக ஜெட்லி உடல்நிலை சரியில்லா காரணத்தால், கடந்தாண்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார்
அப்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஜெட்லியின் பொறுப்பு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலிலும் ஜெட்லி போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டார். உடல்நிலை சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட 9-ஆம் தேதி திடீரென அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராக உள்ளது” என்று குறிபிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அருண் ஜெட்லி அபாயகரமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகயிள்ளது. குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் AIIMS சென்று அவரை காண இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.