Forbes-ன் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2021, 12:56 PM IST
  • உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் நிர்மலா சீதாராமன் 37வது இடத்தில் உள்ளார்.
  • தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
  • மிகவும் சக்திவாய்ந்த பெண் என்ற பட்டத்தை அமெரிக்கர் பெற்றுள்ளார்.
Forbes-ன் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!! title=

புதுடெல்லி: சர்வதேச ஃபோர்ப்ஸ் இதழ் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் (The World’s Most Powerful Women 2021) சேர்த்துள்ளது. இந்தப் பட்டியலில் சீதாராமன் 37வது இடத்தைப் பிடித்துள்ளார். 

போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை நிர்மலா சீதாராமனை 'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்' பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி என்ற பெருமையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெல்லனைப் பின்னுக்குத் தள்ளி, இந்த முறை பட்டியலில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் Nykaa நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பால்குனி நாயரையும் (Falguni Nayar) சேர்த்துள்ளது. இந்த பட்டியலில் அவருக்கு 88வது இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில் Nykaa பங்குச் சந்தையில் களமிறங்கிய பிறகு, ஃபால்குனி நாயர்  இந்தியாவின் ஏழாவது பெண் பில்லியனர் ஆனார்.

ALSO READ | GST Council Meeting: உயிர் காக்கும் பல மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு!

நிதியமைச்சர் சீதாராமன் மற்றும் ஃபால்குனி நாயர் தவிர, இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு பெண்மணியையும் ஃபோர்ப்ஸ் தனது பட்டியலில் சேர்த்துள்ளது. HCL டெக்னாலஜிஸ் தலைவி ரோஷ்னி நாடார் (Roshni Nadar Malhotra) இந்தப் பட்டியலில் 52வது இடத்தைப் பிடித்துள்ளார். ரோஷ்னி நாடார் நாட்டின் மிக முக்கிய IT நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி  ஆவார். இதனுடன், பயோகான் நிறுவனர் மற்றும் செயல் தலைவரான கிரண் மசூம்தார் ஷாவும் (Kiran Mazundar-Shaw) போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 72வது இடத்தில் உள்ளார்.

'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்' பட்டியலில் மெக்கென்சி ஸ்காட் (Mackenzie Scott) முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்காட் உலகின் இரண்டாவது பணக்காரர் மற்றும் அமேசான் குழுமத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (US Vice President Kamala Harris) உள்ளார்.

ALSO READ | ₹2000 நோட்டின் புழக்கம் குறைந்தது ஏன்; மத்திய அரசு கூறுவது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News