முகேஷ் அம்பானியின் "ஆன்டிலியா" பங்களாவில் தீ விபத்து

Last Updated : Jul 11, 2017, 10:43 AM IST
முகேஷ் அம்பானியின் "ஆன்டிலியா" பங்களாவில் தீ விபத்து title=

மும்பையில் அட்லாமவுன்ட் ரோடு பகுதியில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டு தோட்டத்தில் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா மும்பையில் உள்ளது. இந்த பங்களா ஆன்டிலியா என அழைப்படுகிறது. ரெசிடென்சியல் பகுதியாகக் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் இது அமைந்துள்ளது.

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டில் உள்ள தோட்டம் இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குதான் மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது என்று தீயணைப்பு அதிகாரி பி. எஸ். ரஹாங்டேல் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''வீட்டின் தோட்டம் இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது'' என்றார்.

Trending News