இனி நோ டிராஃபிக்! நாளை முதல் FASTAG கட்டாயம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள FASTag முறை நாளை (டிசம்பர் 15) முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

Last Updated : Dec 14, 2019, 03:00 PM IST
இனி நோ டிராஃபிக்! நாளை முதல் FASTAG கட்டாயம்!  title=

மத்திய அரசு கொண்டுவந்துள்ள FASTag முறை நாளை (டிசம்பர் 15) முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிலை தவிர்த்தல், வாகன ஓட்டிகள் எளிதாக சுங்க கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்டவைக்காக FASTag முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் நாளை  முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 

மேலும் சுங்கச்சாவடி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் FASTag பெறாமல், பணமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்ட்டை ஸ்டிக்கர் போல் கார் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். 

FASTagல் தடுப்புக்கம்பிக்கு மேல் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது வழித்தடத்தில் கார் செல்லும் போது, தடுப்புக்கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேனர் கார் கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த சில விநாடிகளிலேயே சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். 

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சோதனை அடிப்படையில் FASTag டிஜிட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாளை முதல் இந்த FASTag முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

FASTag ஸ்டிக்கரை இல்லாத வாகனங்களுக்கு நாளை முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News