விவேகத்தை இழந்துவிட்டார்களா விவசாயிகள்? எல்லை மீறிய தில்லி விவசாயிகள் போராட்டம்!!

தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் தங்கள் பேரணியை துவக்க முயற்சித்ததும், டெல்லியின் பல இடங்களிலும் போராட்டம் செய்ய முற்பட்டதும் கடும் குழப்பத்துக்கும் வன்முறைக்கும் வழி வகுத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2021, 01:42 PM IST
  • டெல்லியின் பல இடங்களில் விவசாயிகள் போராட்டத்தால் குழப்பமும் பதட்டமும் நிலவுகிறது.
  • தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் தங்கள் பேரணியை துவக்க முயற்சி.
  • போராட்டத்தின் தாக்கம் காரணமாக, இந்திரபிரஸ்தா மெட்ரோ நிலையத்தின் நுழைவு / வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
விவேகத்தை இழந்துவிட்டார்களா விவசாயிகள்? எல்லை மீறிய தில்லி விவசாயிகள் போராட்டம்!! title=

மத்திய தில்லியில் உள்ள ITO-வில், தடுப்புகளை உடைத்து, காவல்துறை வீரர்களை தாக்கி, காவல் துறை வாகனங்களை சூறையாடிய விவசாயிகளின் ஒரு குழுவின் மீது காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.

இன்று காலை, டெல்லியின் எல்லைகளில் குழப்பம் நிலவியது. தேசிய தலைநகரின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டிருந்த விவசாயிகளின் (Farmers) குழுக்கள் தலைநகருக்குள் செல்ல போலீஸ் தடுப்புகளை உடைத்தன. டிராக்டர் பேரணிக்கு தில்லி காவல்துறையினர் ஒதுக்கிய நேரத்திற்கு முன்னரே விவசாயிகளின் சில குழுக்கள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டதால் பெரும் குழப்பம் நீடித்தது.

சிங்கு மற்றும் காசிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் லத்திசார்ஜ், கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

டிராக்டர்களின் பேரணியுடன், மத்திய அரசு அமல்படுத்திய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் முகாமிட்டு விவசாயிகள் செய்து வரும் போராட்டத்தின் இரண்டு மாத காலம் நிறைவடையும். மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் நாளான பிப்ரவரி 1 ம் தேதி நாடாளுமன்றத்திற்கு கால்நடையாக அணிவகுக்கும் திட்டத்தையும் உழவர் தலைவர்கள் அறிவித்தனர்.

டெல்லி காவல்துறை (Delhi Police) மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான ஒரு வார சந்திப்புகளுக்குப் பிறகு மூன்று வழிகளை இறுதி செய்தது. இந்த வழிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஹரியானா அதிகாரிகளும் தேசிய தலைநகருக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். விவசாயிகள் பேரணியை நடத்த ஜனவரி 26 ம் தேதி போலீசார் தடுப்புகளை அகற்றுவர் என கூறப்பட்டிருந்தது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று, ராஜ்பத்தில் வழக்கமான குடியரசு தின விழா அணிவகுப்புகள் முடிந்த பின்னர்தான் விவசாயிகள் தங்கள் பேரணியை தொடங்குவார்கள் என்ற நிபந்தனையின் பேரில் தில்லி காவல்துறை தலைநகருக்குள் இன்று ஒரு டிராக்டர் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியிருந்தது. ஒப்பந்தத்தின் படி, விவசாயிகள் எல்லைகளிலிருந்து டெல்லிக்குள் நுழைவார்கள். ஆனால் அவர்கள் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே இருப்பார்கள் என்றும் மத்திய டெல்லியை நோக்கி செல்ல மாட்டார்கள் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும், தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் தங்கள் பேரணியை துவக்க முயற்சித்ததும், டெல்லியின் பல இடங்களிலும் போராட்டம் செய்ய முற்பட்டதும் கடும் குழப்பத்துக்கும் வன்முறைக்கும் வழி வகுத்தது. காவல் துறையினரும் விவசாயிகள் மீது லத்திசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

டெல்லி மெட்ரோ செய்தி: குடியரசு தின விழா மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் (Farmers Protest) தாக்கம் காரணமாக, இந்திரபிரஸ்தா மெட்ரோ நிலையத்தின் நுழைவு / வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

ALSO READ: 72-வது குடியரசு தின விழா: இந்திய தேசியக் கொடியின் பரிணாமமும், முக்கியத்துவமும்..!

சமய்பூர் பத்லி, ரோஹினி பிரிவு 18/19, ஹைதர்பூர் பட்லி மோர், ஜஹாங்கிர் பூரி, ஆதர்ஷ் நகர், ஆசாத்பூர், மாடல் டவுன், ஜிடிபி நகர், விஸ்வவித்யாலயா, விதான் சபா மற்றும் சிவில் லைன்ஸ் ஆகிய நிலையங்காளின் நுழைவு / வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன என டெல்லி மெட்ரோ ரயில் கழகம் கூறியுள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News