குடியரசு தினத்தில் டெல்லி விவசாயிகள் மேற்கொண்ட ட்ராக்டர் பேரணியின் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இது பல் வேறு தரப்பினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில், டிராக்டர் பேரணி (Tractor Rally) நடத்திய விசாயிகள் - போலீசார் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக, இந்தியா டுடே குழுமத்தின் மூத்த பத்திர்க்கையாளர் பொய்யான தகவலை அளித்தார். செய்தியை சேகரிக்க சென்ற அவர், நவ்னீத் என்ற ஒருவர் போலீஸாராச்ல் சுடப்பட்டு இறந்ததாகவும், அவரது உடலை தான் பார்த்ததாகவும், அதற்கு காவல் துறை பதிலளிக்க வேண்டும், அவரது தியாகம் வீணாய் போகாது என விவாசாயிகள் கொதித்து போய் உள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்த செய்தியை அவர் ட்வீட் செய்ததை அடுத்து, உடனேயே அது குறித்த வீடியோவை வெளியிட்டது காவல் துறை. அதில் அவர் டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து தடுப்பின் மீது மோதியதால், கவிழ்ந்து இறந்துள்ளது தெளிவாக தெரிய வந்தது. இதை அடுத்து தனது ட்விட்டர் பதிவை பின்னர் ராஜ்தீப் சர்தேசாய் நீக்கிவிட்டார்.
இந்நிலையில், பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, இந்தியா டுடே குழுமம், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ் ராஜ்தீப் சர்தேசாய்க்கு 2 வார கட்டாய விடுப்பை வழங்கியுள்ளது இந்தியா டுடே குழுமம்,. அவர் டிவி நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்கிற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் பதவி நீக்க செய்யப்பட்டார் அல்லது ராஜினாமா செய்து விட்டார் போன்ற உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வருகின்றன.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR