கிழக்கு லடாக்கில் பதற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது, இந்த ஆண்டு சில சம்பவங்கள் மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கின்றன என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
சீனா (China) எந்த ஒப்பந்தத்தையும் கடைபிடிக்கவில்லை. எல்லை பகுதியில் பதற்றம் எப்போது முடிவடையும் அல்லது தொடர்ந்து நீடிக்குமா என்று வெளியுறவு அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது, அதைப் பற்றி நான் எந்த கணிப்பையும் கூற மாட்டேன் என்று கூறினார்.
FICCI-யின் வருடாந்திர பொது கூட்டத்தில் பேசிய, வெளியுறவு அமைச்சர், எல்லையில் நடந்த பிரச்சனைகள் இந்திய மக்களின் உணர்வுகளை மோசமாக பாதித்துள்ளது. சீனாவின் அத்து மீறிய நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30-40 ஆண்டுகளில் இது மிகவும் சோதனையான காலம் என அண்மையில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கூறினார்
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S.Jaishankar) , “சீனா நமது பொறுமையை சோதிக்கிறது. ஆனால் இந்த தேசிய பாதுகாப்பு சவாலை நாம் சிறப்பாக கையாள்வோம் என்று நான் நம்புகிறேன். '' எனக் கூறினார்
எல்லையில் அமைதியின்மை நிலவுகிறது. இந்தியா மற்றும் சீனாவின் படைகள், இடையில் மே மாத தொடக்கத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் ஒரு பதற்ற நிலை காணப்படுகிறது.
Events of this year have been very disturbing, they've raised some very basic concerns. They've happened because the other party has not abided by agreements that we've had with them about respecting & observing Line of Actual Control & not bringing forces to LAC: EAM Jaishankar pic.twitter.com/RsdEnm9wRM
— ANI (@ANI) December 12, 2020
இரு தரப்பினரும் பல சுற்று இராணுவ மற்றும் ராஜீய நிலையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இருப்பினும், இதுவரை நிலைமையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ALSO READ | Good News: 8 மாதங்களில் 60 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க தயாராகிறது இந்தியா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR