சீன துருப்புக்களை வெளியேற்ற வலுவான நடவடிக்கை தேவை -LBA வலியுறுத்தல்!

லே-யில் வலுவான நடவடிக்கைகள் எடுத்து சீன துருப்புக்களை கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரியின் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் லடாக் பொத்த சங்கம் மற்றும் பிராந்தியத்தின் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Last Updated : Jun 19, 2020, 03:22 PM IST
சீன துருப்புக்களை வெளியேற்ற வலுவான நடவடிக்கை தேவை -LBA வலியுறுத்தல்! title=

லே-யில் வலுவான நடவடிக்கைகள் எடுத்து சீன துருப்புக்களை கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரியின் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் லடாக் பொத்த சங்கம் மற்றும் பிராந்தியத்தின் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

சீன துருப்புகளின் சமீபத்திய ஊடுருவலுக்குப் பிறகு இந்த கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் - ஷோபியன் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...

"இந்தியாவின் தளர்வான கொள்கை காரணமாக, சீனா அடிக்கடி ஊடுருவல்களை மேற்கொள்கிறது... பிங்கர் 4 மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமானது. அரசாங்கம் வலுவாக செயல்படவில்லை என்றால், நமது படையினரும் உள்ளூர் மக்களும் சீன துருப்புக்களின் கைகளில் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று லடாக் பௌத்த சங்த்தின் தலைவர் பி டி குன்சாங் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக "இரு மாநிலங்களின் தலைவர்கள் பேச வேண்டும் மற்றும் பிரச்சினையை தீர்க்க வேண்டும் மற்றும் LAC வரையறுக்க வேண்டும்," என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே லடாக் மக்கள் இந்த பிரச்சினையை தீர்க்க சீனாவுக்கு எதிராக அனைத்தையும் ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் MLA டெல்டன் நம்கியால் தெரிவித்துள்ளார்.

தெற்கு காஷ்மீரில் பாதுகாப்புபடையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...

"அவர்கள் மிக முக்கியமான மூலோபாய புள்ளிகளை எடுத்து வருகின்றனர். கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஏரியின் ஒரு பகுதியிலிருந்து சீன துருப்புக்களை வெளியேற்ற நமது அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் லே வரை ஊடுருவ முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News