இந்திய பொருளாதரத்தை உயர்த்த ஒவ்வொரு மாவட்டமும் உதவ வேண்டும்: மோடி!

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..! 

Last Updated : Nov 7, 2019, 07:03 PM IST
இந்திய பொருளாதரத்தை உயர்த்த ஒவ்வொரு மாவட்டமும் உதவ வேண்டும்: மோடி!  title=

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..! 

இமாச்சலப் பிரதேசத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக தர்மசாலாவில் இரண்டு நாள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, "இந்தியாவில் முதலீடுகளுக்கான போட்டி அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாவட்டமும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன, அவை இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்று ரைசிங் இமாச்சல உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில்; தர்மஷாலாவில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு சற்று குழப்பமானதாக தோன்றலாம், ஆனால் அது உண்மைதான். இது முன்னோடியில்லாதது, உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். முன்னதாக, முதலீட்டாளர்களின் உச்சிமாநாடு நாட்டின் ஒரு சில நகரங்களில் நடந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. ஒவ்வொரு மாநிலமும் இன்று வணிகத்தையும் முதலீட்டையும் ஈர்க்க போட்டியிடுகின்றன. 

இந்தியப் பொருளாதார மதிப்பை 2025 ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் உதவவேண்டும். நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் மாவட்டங்களும் வளர்ச்சிக்கான திறன் நிறையையே இருக்கிறது. எனவே மாநிலங்களும் மாவட்டங்களும் தங்களுக்குள் ஆரோக்கியமான முறையில் போட்டி போட்டுக்கொண்டு வளரவேண்டும். முதலீட்டுக்கான சிறப்பான சூழலை உருவாக்கவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் தொழில் துறையை சர்வதேச அளவுக்கு உயர்த்த முடியும்” என தெரிவித்தார். 

மேலும், சலுகைகள் சிறந்த நிர்வாகத்திற்கு உதவாது என்பதை மாநிலங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளன. அவை தொழில், அல்லது முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு உதவுவதில்லை. சமூகம், அரசாங்கம், தொழில் துறை, அறிவு ஆகிய நான்கும்தான் வளர்ச்சிக்கான நான்கு சக்கரங்கள் என மோடி கூறினார். எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான சர்வதேசப் பட்டியலில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டார். 

 

Trending News