நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தொடங்கியதில் இருந்து தினசரி தொற்று பாதிப்புகள் 3.5 லட்சம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சிறிது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் எய்ம்ஸ் (AIIMS) ஏற்பாடு செய்த கோவிட் -19 (COVID-19) சிகிச்சையில் ஆக்ஸிஜன் சிகிச்சையைப் பற்றிய ஒரு வெபினாரில் பேசிய அவர், கொரோனா சிகிட்டையில், வெண்டிலேட்டரை விட ஆக்ஸிஜன் சிகிச்சை மிக முக்கியமானது என்று வலியுறுத்தினர். ஏனெனில் ஆக்ஸிஜன் சிகிச்சையில் அதிகமானவர்களை காப்பாற்ற முடியும் என்றார். அதனால், நம்மிடம் உள்ள ஆக்ஸிஜனை, வீணாக்காமல், தேவையான இடத்தில், சிறந்த வகையில் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒருவரின் ஆக்ஸிஜன் செறிவு 94, 95 சதவீதமாக இருந்தால், அவருடைய உடலில் போதுமான ஆக்ஸினன் உள்ளது என்பது பொருள். அதனால் அதை 98 அல்லது 99 சதவீதமாக அதிகரிக்க, ஆக்ஸிஜனை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.
"நோயாளியின் ஆக்ஸிஜன் செறிவு நிலை 94 சதவீதமாக இருந்தால், உங்கள் உடலில் போதுமான ஆக்ஸிஜன் இருப்பதாக அர்த்தம். முன்னதாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீண்ட நேரம்ன் ஆக்ஸிஜன் சிகிச்சையை கொடுக்கும் போது, ஆக்ஸிஜன் செறிவூட்டல் 88 என்ற அளவில் கூட அவர்ஃஅது உடல நிலை நன்றாக இருப்பதை பார்க்கிறோம். அதனால் 92 அல்லது 93 என்ற அளவில் ஆக்சிஜன் செறிவு இருந்தால் பீதி அடையத் தேவையில்லை. இந்த அளவில் நீங்கள், பீதி அடையாமல் மருத்துவ ஆலோசனையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று AIIMS இயக்குநர் டாக்டர் குலேரியா கூறினார்.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
வீட்டு உபயோகத்திற்காக ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்க வேண்டுமா? இந்த கேள்விக்கு பதிலளித்த டாக்டர் குலேரியா, சரியான பயன்பாடு தெரியாமல் மக்கள் வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேமித்து வைப்பதால், அது வீணாகுமே தவிர எந்த பயனும் இல்லை என்றார்
மேலும், ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க புரோன் பொசிஷனிங்கை (Prone Positioning) பயன்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். புரோன் பொசிஷன் என்பது குறிப்பிட்ட நேரம் குப்புறபடுப்பது, பின்னர் வலதுபுறம் படுப்பது, பின்னர், சிறிது நேரத்திற்கு உட்கார்ந்து கொண்ட பிறகு, இடது புறமாக படுப்பது. பின்னர் இறுதியாக மீண்டும் குப்புறபடுப்பது. முகத்தை கவிழ்த்துக் கொண்டு, மார்பை உயர்த்தி, விரைவான சுவாசத்தை பயிற்சி செய்வதும் இதில் அடங்கும். இது ‘புரோன் வென்டிலேட்டர் முறை’ எனவும் அழைக்கப்படுகிறது.
ஆக்ஸிஜன் செறிவு குறையும் போது, சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொண்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு ஆக்ஸிஜன் செறிவூட்டலை பார்க்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். ஓய்வெடுத்த பின்னும், ஆக்ஸிஜன் அளவு மேலும் குறைந்தால் மருத்துவரை அணுகவும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | COVID-19: தனிமைபடுத்தப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனை சிகிச்சை எப்போது தேவைப்படுகிறது