230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் இன்று வரை நடைப்பெற்றது. பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது.
இந்தநிலையில் கடந்த 23 மணிநேரமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜகா 109 இடங்களிலும், பிஎஸ்பி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் இரண்டு இடங்கள் தேவை, இதனால் மற்ற கட்சிகளின் உதவியை நாடியது. குறிப்பாக மாயாவதியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது அவர் கூறியதாவது: நாங்கள் மத்திய பிரதேசத்தில் இரண்டு இடங்களை வென்றுள்ளோம். எங்கள் ஆதவு காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கிறோம். பாஜகவுக்கு ஆதவு என்ற பேசுக்கே இடம் இல்லை எனக் கூறினார்.
மாயவதி ஆதரவு தெரிவித்துள்ளதால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது.