4 வாக்களர் கொண்ட கிராமத்திற்கு தனி வாக்கு சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையம்!

வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டினையும் குறிவைத்து செயல்படும் தேர்தல் ஆணையம், வெறும் 4 நான்கு ஓட்டுகள் கொண்ட கிராமத்திற்கும் தனி வாக்கு சாவடி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2018, 08:19 PM IST
4 வாக்களர் கொண்ட கிராமத்திற்கு தனி வாக்கு சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையம்! title=

வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டினையும் குறிவைத்து செயல்படும் தேர்தல் ஆணையம், வெறும் 4 நான்கு ஓட்டுகள் கொண்ட கிராமத்திற்கும் தனி வாக்கு சாவடி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ளது சொன்ஹாத் சட்டமன்ற தொகுதி. இந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தான் செரந்தாந்த் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 143-ல் வெறும் 4 ஓட்டுகளே உள்ளது. இதிலும் 3 பேர் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள்.

மாவட்ட தேர்தல் அதிகாரி NK துக்கா இதுகுறித்து தெரிவிக்கையில்... இந்தியராக பிறந்த ஒவ்வொருவரும் வாக்களிகும் உரிமையினை பெற்றுள்ளனர். அவர்கள் உரிமையினை சக மனிதர்கள் பெருவதினை போல் தாங்களும் பெற கடமை பட்டுள்ளனர். எனவே குறிப்பிட்ட 4 பேர் கொண்ட கிராமத்திற் தேர்தல் குழு சென்று அவர்களது ஓட்டுகளை பெற்று வரும் என தெரிவித்துள்ளார். 

காட்டுப்பகுதியில் இருக்கும் இந்த கிராமத்திற்கு தேர்தலுக்கு முந்தைய நாள் தேர்தல் குழு ராக்கி ட்ரெயின் மூலம் 6 கிமீ பயணித்து செல்வர். அங்கு ஒரு சிறிய கூடாரம் அமைத்து வாக்களர்களிடன் இருந்து ஓட்டுகளை பெற்று திரும்புவர், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நகரத்தினை விட்டு 15 கிமி தொலைவில் தள்ளி இருக்கும் இந்த கிரமாத்திற்கு செல்ல வேண்டுமெனில் இடையில் இருக்கும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும்.

சத்தீஸ்கர் | 90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறும்.

  • முதற்கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 12, 2018
  • இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 20, 2018
  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018

Trending News