ஜனவரி 20 வரை ‘இரட்டை இலை’ சின்னத்தை பயன்படுத்த தடை?

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில் மீண்டும் ஏற்பட்ட பிளவு காரணமகா கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Last Updated : Jan 14, 2020, 05:43 PM IST
ஜனவரி 20 வரை ‘இரட்டை இலை’ சின்னத்தை பயன்படுத்த தடை? title=

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில் மீண்டும் ஏற்பட்ட பிளவு காரணமகா கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியானது, மத்திய திருவிதாங்கூர் மத்திய பிராந்தியத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக திகழ்கிறது. குறிப்பாக, அப்பிராந்தியத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அக்கட்சிக்கு தனி மதிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. என்றபோதிலும் இந்த கட்சியில் அவ்வப்போது பிளவுகள் ஏற்பட்டு மறைவது வழக்கமாகி வருகிறது.

கடந்த 1964-ஆம் ஆண்டு முதலே அக்கட்சி பல்வேறு பிளவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கேரள காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவராக இருந்த கே.எம். மாணியின் மறைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் பிரச்னை பூதாகராமாக உருமாறியுள்ளது.

இதனிடையே சூழ்நிலையில் கட்சித் தலைவராக செயல் தலைவர் பி.ஜே. ஜோசப்பை அங்கீகரிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மூத்த தலைவர் ஜாய் ஆபிரகாம் கடிதம் எழுதினார். இதையடுத்து கே.எம். மாணியின் மகன் ஜோஸ் கே. மாணிக்கும் ஜோசப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. மேலும் ஜோஸ் கே. மாணியின் ஆதரவாளர்கள், அவரை கட்சியின் தலைவராக தேர்வு செய்தனர். இதற்கு ஜோஸ் கே. மாணியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியின் சின்னமான இரட்டை இலைக்கு உரிமை கோரி இரு தலைவர்கள் தரப்பில் இருந்தும் உரிமை குரல்கள் எழுந்தது. விவகாரம் தேர்தல் ஆணையத்தினை எட்ட, வரும் ஜனவரி வரை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்து இருதரப்பினருக்கும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் தடை உத்தரவு குறித்து கே மணி தெரிவிக்கையில், தங்கள் கட்சியின் தேர்தல் சின்னத்தை எதிர்தரப்பினர் அத்துமீறி பயன்படுத்துவதாக தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு வெளியாகியுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

விரைவில் ஆலப்புழாவின் குட்டநாடுவில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் ஈடுப்பட்டு இருக்கும் கேரளா காங்கிரஸ்(எம்) கட்சியினர் இடையே தற்போது இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News