ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல்....
INX மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது CBI மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இதை தொடர்ந்து, ப.சிதம்பரத்தை விசாரணை செய்ய CBI சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் முதற்கட்டமாக மே 31 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தொடர்ந்து 3 முறை தடை நீட்டித்து உத்தரவிடப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தற்போது ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
Aircel-Maxis case: Delhi's Patiala House Court fixes 26th November as the date for consideration on the chargesheet. https://t.co/dKHe0zTvZZ
— ANI (@ANI) October 25, 2018