விமான பயணங்களுக்கு ஆரோக்கி சேது செயலி அவசியம் என்றும், விமானத்தில் உணவு விநியோகம் இல்லை என்றும், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்!!
கொரோனா வைரஸ்க்கு இடையில் மே 25 முதல் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவித்த ஒரு நாள் கழித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை, மத்திய இருக்கையை காலியாக விமானங்களில் விட்டுச் செல்ல அரசாங்கம் திட்டமிடவில்லை என்று வலியுறுத்தினார். மேலும், சமூக விலகல் அவசியம் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அதனுடன் தொடர்புடைய பிற தடுப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்று கூறினார். "நாங்கள் நடுத்தர இருக்கையை காலியாக விடத் திட்டமிடவில்லை, இது உடல் ரீதியான தூரத் தேவையை பூர்த்தி செய்யாது. அதனுடன் தொடர்புடைய பிற தடுப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கிறோம். இருக்கை காலியாக வைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு செலவு அதிகரிப்பைக் கொடுக்கும், இந்த விருப்பம் உலகம் முழுவதும் பின்பற்றப்படவில்லை," பூரி கூறினார்.
கடந்த 5 ஆம் தேதி வந்தே பாரத் திட்டம் குறித்து அறிவிக்க நாம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்தோம் தற்போது, நாம் நேரடியாக சந்தித்துள்ளோம். இதன் மூலம், சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையும், பொருளாதாரத்தை மீண்டும் துவக்குவதற்கான வந்துவிட்டதை பிரதிபலிக்கிறது. வந்தேபாரத் திட்டம் என்பது, வெளிநாட்டில் இருக்கும் அனைத்து இந்தியர்களை அழைத்து வருவது அல்ல. வெளிநாடுகளில் தவித்தவர்களை அழைத்து வருவதை இலக்காக கொண்டோம். பல்வேறு நாடுகளில் இருந்து இரண்டு லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலையிழந்தவர்களை போர் விமானம் மூலம் அழைத்து வந்துள்ளோம். வந்தேபாரத் திட்டம் துவக்கப்பட்ட இரண்டாவது வாரங்களில் அதிகமானோரை அழைத்து வந்துள்ளோம். இனி வரும் காலங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த முயற்சியில், ஏர் இந்தியா தவிர்த்து, தனியார் விமானங்களும் பயன்படுத்தப்படும்.
வரும் 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக துவக்கப்படும். இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து சர்வதேச விமான போக்குவரத்து துவக்கப்படும். விமானத்தில் பயணிப்போர், பாதுகாப்பு பாதுகாப்பு உடை, மாஸ்க் அணிந்திருப்பதுடன், சானிடைசர் பாட்டீல் வைத்திருக்க வேண்டும். விமானத்தில் உணவு வழங்கப்படாது. இருக்கையில் குடிநீர் பாட்டீல் வைக்கப்படும். பயணி, கொரோனாவில் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய ஆரோக்கிய சேது செயலி மூலம் உறுதி செய்யப்படும்.
இந்த செயலியில், ஸ்டேட்டஸ் சிவப்பாக இருந்தால், அவர் பயணிக்க அனுமதி கிடையாது. விமான ஊழியர்கள், முழுபாதுகாப்பு உடை அணிந்திருக்க அறிவுறுத்தப்படும். விமானத்தில் ஒரு பை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்குவதுடன், விமானம் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வர வேண்டும்.
விமான கட்டணங்கள் முறைபடுத்தப்படுவதுடன், நிலையான வரம்பில் இருக்கப்படும். இந்த உத்தரவு இன்று முதல் 24 ஆகஸ்ட் நள்ளிரவு வரை அமலில் இருக்கும். விமான பயணத்திற்கான குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை மத்திய அரசு வரையறுத்துள்ளது. டில்லி மும்பை போன்ற நகரங்களில், பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்களாக இருக்கும் நிலையில், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.3,500ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.10 ஆயிரமும் இருக்கும். இது 3 மாதங்கள் அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.