Porn நடிகை பண்ற மாதிரி பண்ணு! மனைவியை Torture செய்த கணவன்!

Husband Torture: ஆபாச நடிகை போல உடை அணிய சொன்னதாக கூறி பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 6, 2023, 09:43 PM IST
  • மனைவியை ஆபாச நடிகையைப் போல நடிக்கச் சொல்லி டார்ச்சர் செய்த கணவன்
  • கணவன் மீது போலீஸில் புகார் கொடுத்த பெண்
  • போலீசாரின் கிடுக்கிப் பிடியில் கணவன்
Porn நடிகை பண்ற மாதிரி பண்ணு! மனைவியை Torture செய்த கணவன்! title=

புதுடெல்லி: ஆபாச நடிகை போல உடை அணிய சொன்னதாக கூறி பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். டெல்லி சாதரா மாவட்டத்தை சேர்ந்த 35 வயதாகும் நபருக்கு 30 வயதாகும் மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அந்தப் பெண் தனது கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் ஆபாச படங்களுக்கு அடிமையானவர் என்றும் தினமும் ஆபாச படங்கள் விட்டு தன்னை அந்த படங்களில் வரும் நடிகைகளை போல உடை அணிய சொல்வதாகவும், அந்தப் பெண்கள் போலவே நடந்து கொள்ள செல்வதாக கூறி டார்ச்சர் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கணவரின் குடும்பத்தார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் மறுபுறம் கணவர் ஆபாச படம் பார்க்க சொல்வதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் அதனால் தான் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | எலக்‌ஷனுக்கு முன்னாடி கல்யாணம் செய்துக்கோங்க ராகுல்! பிரதமராக யோசனை சொல்லும் லாலு பிரசாத்

விசித்திரமான இந்த வழக்கில் தற்போது வரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சாதரா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கணவன் மனைவிக்குள் சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கணவர் அல்லது உறவினர்கள் பெண்ணை கொடுமைப்படுத்துதல்,  வரதட்சனை கொடுமை, இயற்கைக்கு மாறான குற்றம் புரிதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் டிஜிட்டல் ஆதாரங்கள் ,வாக்குமூலங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்ட பின்னர் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போலீசார் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

என்னதான் அவர்கள் கணவன் மனைவியாக இருந்தாலும் No means no என்ற அடிப்படையில் அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பெண்கள் நல ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி திருமணம்..! மகளின் காதலன் வீட்டை உரு தெரியாமல் சிதைத்த குடும்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News