Kanpur Metro: கான்பூர் மெட்ரோவின் கட்டணம் மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்

கான்பூர் மெட்ரோவின் 9 கிமீ நீண்ட பாதையை உ.பி. மெட்ரோ ரயில் நிறுவனம் 2 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளது. கான்பூர் ஐஐடியிலிருந்து மோதிஜீல் வரையிலான 9 கிமீ பயணத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 28, 2021, 02:02 PM IST
Kanpur Metro: கான்பூர் மெட்ரோவின் கட்டணம் மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள் title=

கான்பூர் மெட்ரோ செய்திகள்: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை அடுத்து கான்பூருக்கும் மெட்ரோ சேவை கிடைக்கப் போகிறது. கான்பூர் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) 28 டிசம்பர் 2021 அன்று தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அவருடன் மாநில முதலவர் யோகி மற்றும் அமைச்சர் ஹர்தீப் பூரி ஆகியோர் கான்பூர் ஐஐடி மெட்ரோவில் இருந்து கீதா நகர் மெட்ரோ நிலையம் வரை பயணம் செய்தனர். கான்பூர் மெட்ரோ அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவக்கப்பட்டு உள்ளது.

கான்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தில், 9 கிமீ வரை இயக்கப்படும். முதற்கட்டமாக ஐஐடி கான்பூரில் இருந்து மோதிஜீல் வரையிலான 9 நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

ஆரம்பத்தில், ஒவ்வொரு நிலையத்திலும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் சேவை கிடைக்கும். இருப்பினும், இதற்குப் பிறகு, மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ​​அதன் நேரம் மேலும் குறையும்.

ஐஐடியில் இருந்து மோதிஜீல் செல்ல 30 ரூபாய் கட்டணம். அதேசமயம் கான்பூர் மெட்ரோவின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக இருக்கும். கான்பூர் மெட்ரோவின் டிக்கெட்டுகள் QR குறியீட்டில் இருக்கும் என்பது சிறப்பு.

prime minister narendra modi in kanpur

ALSO READ | PM Modi in Kanpur: கான்பூரில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்தார் பிரதமர்

கான்பூர் மெட்ரோவின் 9 கிமீ நீண்ட பாதையை உ.பி. மெட்ரோ ரயில் நிறுவனம் 2 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளது. கான்பூர் ஐஐடியிலிருந்து மோதிஜீல் வரையிலான 9 கிமீ பயணத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்ளன.

கான்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு நீளம் 32 கி.மீ. 11,000 கோடிக்கு அதிகமான செலவில் கட்டப்படுகிறது. கான்பூரில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. 

2022 உ.பி., சட்டசபை தேர்தலுக்கு முன், கான்பூர் மக்களுக்கு, மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் என மாநில அரசு உறுதியளித்தது. இதன் முதல் கட்டம் 2021 இறுதிக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

Kanpur Metro

ALSO READ | உ.பி. சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் - அதிர்ச்சி அளித்த அகிலேஷ் யாதவ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News