10 July 2019, 10:40 AM
ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றம் செல்கின்றனர். சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்த கிளர்ச்சி காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) தலைவர்கள், சபாநாயகர் தனது அரசியலமைப்பு கடமையை கைவிட்டதாகவும், அவர்கள் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
#Karnataka rebel Congress and JD(S) leaders who have resigned from Assembly, move Supreme Court accusing the Speaker of abandoning his constitutional duty and deliberately delaying acceptance of their resignations. Supreme Court to hear the matter tomorrow. pic.twitter.com/ef3cgICKYC
— ANI (@ANI) July 10, 2019
10 July 2019, 10:30 AM
எனது நண்பர்களைச் சந்திக்காமல் நான் செல்லமாட்டேன். அவர்கள் என்னை அழைப்பார்கள். அவர்களின் இதயம் உடைந்து விடும். நான் ஏற்கனவே தொடர்பில் இருக்கிறேன், எங்கள் இருவரின் இதயங்களும் துடிக்கின்றன.
Karnataka Minister DK Shivakumar: I'll not go without meeting my friends. I can't go by you (rebel Karnataka MLAs not ready to meet him), they'll call me. Their heart will break. I'm in touch already, hearts of both of us are beating https://t.co/LrwvHnQnfP
— ANI (@ANI) July 10, 2019
10 July 2019, 10:17 AM
ரேனைஸ்சன்ஸ் மும்பை கன்வென்ஷன் சென்டர் ஹோட்டலுக்கு வெளியே கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறுகையில்; அரசியலில் எதுவும் நிரந்தரமாக இல்லை. நண்பர்கள் யாரும் இல்லை. எந்த நேரத்திலும் யாராலும் திரும்ப முடியாது. நான் அவர்களை (கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள்) தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் .நான் ஒரு அழைப்பைப் பெறுவேன். அவர்களின் நண்பரைச் சந்திக்க அவர்களின் இதயம் துடிக்கிறது.
Karnataka Minister DK Shivakumar outside Renaissance Mumbai Convention Centre Hotel: Nothing is permanent in politics. There're no friends&no enemies.Anyone can turn at any moment.I'm trying to contact them(rebel MLAs).I'll get a call.Their heart is beating to meet their friend. pic.twitter.com/2cdXiSn4dk
— ANI (@ANI) July 10, 2019
மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள கர்நாடக எம்.எல்ஏக்களை அமைச்சர் சிவகுமார் சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்!!
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 3 பேர், சுயேச்சை MLA-கள் 2 பேர் என 15 பேர் ராஜினாமா செய்திருப்பதால் குமாரசாமி தலைமையிலான அரசு எப்போது வேண்டும் என்றாலும் கவிழலாம் என்ற நிலையில் ஊசலாடி வருகிறது.
அதிருப்தி MLA-கள் 10 பேர் மும்பையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்துவதற்காக அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் குமாரசாமியிடம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் MLA-கள் அளித்துள்ள ராஜினாமா கடிதங்களை ஏற்பது குறித்து விதிமுறைப்படி தான் முடிவு எடுக்க முடியும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். 5 MLA-கள் அளித்துள்ள ராஜினாமா கடிதங்கள் தான் முறைப்படி இருப்பதாகவும், 8 MLA-களின் கடிதங்கள் சட்ட விதிமுறைப்படி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கட்சி விதிமுறைகளை மீறிய அதிருப்தி MLA-களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் பதவி விலகிய MLA ரோஷன் பெய்க்கிற்கு, IMA நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு விசாரணைக்குழு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் தார்வாடில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, அதிருப்தி MLA-களை பின்னணியில் இருந்து பாஜக இயக்குவதாக கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்று கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா விளக்கம் அளித்தார். கட்சி தலைமை மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள் பதவி விலகி இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. பாஜகவை குற்றம்சாட்டி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் குழப்பம் தொடர்ந்தால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, பின்னர் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, மும்பையில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் பத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முதலமைச்சர் குமாரசாமியோ, அமைச்சர் சிவக்குமாரோ தங்களை பார்க்க வரக்கூடாது என கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். குமாரசாமியும் சிவக்குமாரும் தங்கள் ஆட்களுடன் ஓட்டலுக்கு படையெடுக்க உள்ளதாகவும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.இதையடுத்து எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
K'taka crisis: Shivakumar arrives in Mumbai to meet rebel MLAs, says 'born together in politics, will die together'
Read @ANI Story | https://t.co/kxF6MLkLsT pic.twitter.com/527amJAgaR
— ANI Digital (@ani_digital) July 10, 2019
இதையடுத்து, அமைச்சர் சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்; நான் இங்கே ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளேன். எனது நண்பர்கள் இங்கே தங்கியிருக்கிறார்கள். ஒரு சிறிய சிக்கல் உள்ளது, நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். நாங்கள் உடனடியாக விவாகரத்துக்கு செல்ல முடியாது. அச்சுறுத்தும் கேள்வி இல்லை, நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம், மதிக்கிறோம்
DK Shivakumar,outside Renaissance Mumbai Convention Centre Hotel: I've booked a room here. My friends are staying here.There has been a small problem, we've to hold negotiations.We can't go for a divorce immediately. There is no question of threatening, we love&respect each other pic.twitter.com/RRcazlhbRq
— ANI (@ANI) July 10, 2019
இந்த சூழ் நிலையில், இவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் சிவகுமார் இன்று மும்பை ஹோட்டலுக்கு சென்றார். ஆனால், அமைச்சர் சிவகுமார் வருகையால் அச்சுறுத்தல் ஏற்படும் என 10 எம்.எல்.ஏக்களும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதால், அமைச்சர் எம்.எல்.ஏக்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஹோட்டலுக்கு செல்ல மட்டுமே அமைச்சர் சிவகுமாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
#Mumbai: Supporters of JD(S) leader Narayan Gowda outside Renaissance hotel raise slogans of "Go back, Go back" as Karnataka Minister DK Shivakumar is expected to arrive at the hotel shortly. (Pic-3: file pic of Narayan Gowda) pic.twitter.com/ZryBynfPrL
— ANI (@ANI) July 10, 2019
இந்த நிலையில், JD (S) தலைவர்களில் ஒருவரான நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஓட்டலின் வெளியே நின்று கொண்டு திரும்பி போ, திரும்பி போ என கோஷம் எழுப்பியபடி உள்ளனர்.