தின்தோரி: மத்திய பிரதேஷ் மாநிலம் தின்தோரின் கர்ப்பிணி பெண் ஒருவர், மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பின் விவசாய வயலில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, குழந்தை பிறப்பதற்கு முன்னரே இறந்து விட்டது என மருத்துவமனையில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இதனால் அவர் தன்னுடன் இருந்த மற்ற பெண்மனிகளின் உதவியோடு பிரசவம் பார்த்துக்கொண்டார்.
குழந்தை பிறக்காத நிலையில், மருத்துவமனையில் மருத்தவர்கள் இவ்வாறு செய்தது தவறானது, அவர்கள் மீது கடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி, தெரிவித்துள்ளார்.
Dindori: Woman delivered baby in a field with help of other women after doctors allegedly declared her unborn baby dead & made her leave hospital, Chief Medical Officer says 'action would be taken after probe, culprits may be suspended or punished with a pay cut' #MadhyaPradesh pic.twitter.com/Q1cqX1W3dO
— ANI (@ANI) December 18, 2017
மேலும் இச்சம்பவம் தொடர்பாக 'விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.