Farmers Protest: விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 8 ஆம் தேதி Bharat Bandh

5வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி டிசம்பர் 8-ம் தேதி "பாரத் பந்த்" கண்டிப்பாக நடைபெறும் என உறுதி விவசாய சங்கம் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2020, 08:59 PM IST
  • 5வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி டிசம்பர் 8-ம் தேதி "பாரத் பந்த்"
  • புதிய வேளாண் சட்டங்களை (New Farm Laws) ரத்து செய்ய வேண்டும். முடியுமா? முடியாதா?
  • முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்புமாறு அரசு கோரிக்கை.
  • வாட்டும் குளிருக்கு மத்தியில் பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்.
Farmers Protest: விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 8 ஆம் தேதி Bharat Bandh title=

புது டெல்லி: மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை எந்தவிட முடிவும் எட்டப்படததால், சனிக்கிழமையன்று (டிசம்பர் 9) மீண்டும் பேச்சுவாரத்தை நடத்தவும், அதற்குள் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய கூட்டத்தில், விவசாயிகள் தொழிற்சங்கம் தரப்பில், அவர்களின் முக்கிய கோரிக்கையான மூன்று புதிய வேளாண் சட்டங்களை (New Farm Laws) ரத்து செய்ய வேண்டும். முடியுமா? முடியாதா? என்பதையும் மட்டும் பதில் சொல்லுங்கள். சட்டங்களை அகற்ற மத்திய அரசு தயாராக இல்லை என்றால், நாங்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம் என வெளிப்படையாகவே தங்கள் கோரிக்கையை வைத்தனர். 

ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவாரத்தையில் முடிவு எட்டாப்படாததால், அதன் பின்னர் செய்தியாளர்க்ளை சந்தித்த விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்துள்ளதால், திட்டமிட்டபடி வரும் 8 ஆம் தேதி "பாரத் பந்த்" (Bharat Bandh) நடைபெறும் என அறிவித்தனர். மூன்று வேளாண் சட்டங்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்படும் எனவும் கூறினார். இதன்மூலம் டெல்லி சலோ போராட்டம் வலுவடைந்துள்ளது.

 

முன்னதாக கூட்டத்தின் போது, ​வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar), தொழிற்சங்கத் தலைவர்களிடம் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். 

ALSO READ |  விவசாயிகள் போராட்டம்: பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை; நீடிக்கும் போராட்டம்

மத்திய அரசாங்கத்திற்கும், உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. இதில் ரயில்வே, வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் மாதம் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, நவம்பர் 26 முதல் பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (Farm Bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

ALSO READ |  விவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி

ஏற்கனவே நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றிப் பெறாத நிலையில், விவசாயிகளுடன் (Farmers) ஐந்தாவது சுற்று சந்திப்புக்கு முன்னதாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் புதுடடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

மத்திய அரசு( Modi Government) விவசாய குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News