ராமர் கோவிலுக்கு நிலம் அளிக்க தயார் -ஜேக்கப் ஹபிபுதீன் துசி!

அயோத்தி ராம் கோயில் மற்றும் பாபர் மஸ்ஜித் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் முகலாய ஆக்கிரமிப்பாளர் பாபரின் வழித்தோன்றல் "ராம் கோயிலின் முதல் செங்கலை தாங்கள் வைக்க தயார்" என தெரிவித்துள்ளார். 

Last Updated : Aug 19, 2019, 11:39 AM IST
ராமர் கோவிலுக்கு நிலம் அளிக்க தயார் -ஜேக்கப் ஹபிபுதீன் துசி! title=

அயோத்தி ராம் கோயில் மற்றும் பாபர் மஸ்ஜித் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் முகலாய ஆக்கிரமிப்பாளர் பாபரின் வழித்தோன்றல் "ராம் கோயிலின் முதல் செங்கலை தாங்கள் வைக்க தயார்" என தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் கடைசி முகலாய ஆட்சியாளர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றலான ஜேக்கப் ஹபிபுதீன் துசி, அயோத்தியில் ஒரு பிரமாண்டமான ராம் கோயில் கட்ட விருப்பம் தெரிவித்துள்ளார், இது நடந்தால், தங்கள் குடும்பம் அதன் முதல் செங்கலை வைத்து, அஸ்திவாரத்திற்கு தங்க கல்லை நன்கொடையாக அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து துசி கூறுகையில், 1529-ஆம் ஆண்டில், முதல் முகலாய ஆட்சியாளர் பாபர் தனது வீரர்களுக்கு பிரார்த்தனை செய்ய இடம் கொடுப்பதற்காக பாபர் மசூதியைக் கட்டினார். இந்த இடம் படையினருக்கு மட்டுமே, யாருக்கும் அல்ல. மசூதிக்கு முன்பு இங்கே என்ன இருந்தது என்ற விவாதத்தில் இறங்க நான் விரும்பவில்லை, ஆனால் இந்துக்கள் அந்த இடத்தை ராமரின் பிறப்பிடமாக நம்பினால், நான் அவர்களின் நம்பிக்கையை ஒரு உண்மையான முஸ்லிமாக மதிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக கூறி, கடந்த 1992-ஆம் ஆண்டு, டிச.,6-ல் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

ராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு, நவம்பர், 17-க்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர், வழித்தோன்றலான ஜேக்கப் ஹபிபுதீன் துசி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ள, தங்க செங்கல் ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News