டெல்லியில் கடும் குளிர்! 17 ரயில் ரத்து! அவதியில் மக்கள்!

டெல்லியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக டெல்லியிலிருந்து புறப்படும் 17 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Dec 21, 2019, 11:47 AM IST
டெல்லியில் கடும் குளிர்! 17 ரயில் ரத்து! அவதியில் மக்கள்! title=

டெல்லியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக டெல்லியிலிருந்து புறப்படும் 17 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தலைநகரம் டெல்லியில் கடுமையான குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அதிக நிலை குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. அந்தவகையில் இன்று கடும் குளிர் நிலவுகிறது. நகரின் பல பகுதிகளில் 'கடுமையான குளிர் நிலவுவதாக' வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், தேசிய தலைநகரில் காற்றின் தரம், கடந்த இரண்டு மாதங்களிலிருந்து பெரும்பாலும் 'கடுமையான' அல்லது 'மிகவும் மோசமான' பிரிவின் கீழ் சென்றுள்ளது., எனினும் சற்று தலைகாட்சி சென்ற மழையில் காரணமாக, காற்றின் வேகம் அதிகரித்த பின்னர் அதன் தரம் மிகவும் மேம்பட்டது. 

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் நடைபாதையில் வசிக்கும் மக்கள் அவதியுறுகின்றனர். குளிர் தாங்க முடியாத மக்கள் சாலையில் விறகு சுள்ளிகளை வைத்து தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கடுங்குளிரால் நடைபாதையில் வசிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. 

இந்நிலையில் டெல்லி விமான நிலைய பகுதியில் நிலவிய பனிமூட்டத்தால் நேற்று 760 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமடைந்தன. மேலும் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 5 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

தற்போது இன்று 17 டெல்லியிலிருந்து புறப்படும் 17 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இயக்கப்பட்டன.

இதேபோல், வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Trending News