கருப்புப் பண சலுகை இன்று மத்திய அரசு அறிவிப்பு

Last Updated : Dec 17, 2016, 12:58 PM IST
கருப்புப் பண சலுகை இன்று மத்திய அரசு அறிவிப்பு title=

அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்கலாம். 50 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்க காலக்கெடுவை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்கலாம். கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிகிறது. கருப்பு பணத்தை தானாக முன் வந்து அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என்று அதிகரிகள் கூறினார்கள். மேலும் இதைப்பற்றி அதிகாரமான அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

மக்கள் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தில் இணைய வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Trending News