டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக் கேடானது என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்!!
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் கடைகள், கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நிலவும் வன்முறைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி இன்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். தொண்டர்களுடன் அவர் பேரணியில் நடந்து சென்றார். ஜந்தர் மந்தர் பகுதியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக் கேடானது என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
Delhi: Congress leaders and workers participating in 'peace march' stopped at Janpath Road. They were heading towards Gandhi Smriti. pic.twitter.com/LSaAAhmTo6
— ANI (@ANI) February 26, 2020
இது குறித்து அவர் செய்தியாளர்களைடம் கூறுகையில்.... "மத்திய அரசு இதுவரையிலும் அமைதிகாப்பது வெட்கக்கேடானது. வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அமைதி காக்கவும் வேண்டுகோள் விடுக்கிறேன். உ.பி. மாநிலத்தில் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் அமைதியை நிலைநாட்ட காங்., நிர்வாகிகளிடம் கூறியுள்ளேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.