டெல்லி: 125 மதுபானக்கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது!

தலைநகரம் டெல்லியில் பீர் மற்றும் ஒயின் போன்ற மதுவிற்பனை செய்யும் 125 கடைகள், இன்று முதல் மூடப்படையுள்ளதாக டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 20, 2019, 03:55 PM IST
டெல்லி: 125 மதுபானக்கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது! title=

தலைநகரம் டெல்லியில் பீர் மற்றும் ஒயின் போன்ற மதுவிற்பனை செய்யும் 125 கடைகள், இன்று முதல் மூடப்படையுள்ளதாக டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பீர் மற்றும் ஒயின் போன்ற மதுவகைகளை விற்பனை செய்வதற்கான எல்-12 லைசென்ஸ் பெற்ற கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையில் அங்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லியில் அவ்வாறு 125 பீர் மற்றும் ஒயின் போன்ற மதுபானக்கடைகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக இந்த திடீர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட 125 பீர் மற்றும் ஒயின் போன்ற மதுபானக்கடைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மூடப்படும் என்று டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், முறைகேடுகளில் ஈடுபட்ட125 பீர் மற்றும் ஒயின் போன்ற மதுபானக்கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று அவர் ஹிந்தியில் டிவீட் பதிவு செய்துள்ளார்.

அதன்படி இதில் முறைகேடு செய்து சம்பந்தப்பட்ட 125 மதுக்கடைகளும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.

Trending News