Delhi pollution: இன்று முதல் 10 நாட்களுக்கு பல கட்டுப்பாடுகள்!!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை தடுக்க இன்று முதல் 10-ம் தேதி வரை பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

Last Updated : Nov 1, 2018, 11:54 AM IST
Delhi pollution: இன்று முதல் 10 நாட்களுக்கு பல கட்டுப்பாடுகள்!! title=

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை தடுக்க இன்று முதல் 10-ம் தேதி வரை பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் முதல் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டெல்லியின் காற்று மாசு விகிதம் 400-ஐ கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 

கடந்த மூன்றாண்டுகளாக டெல்லியில் தீபாவளி சமயத்தின்போது மக்கள் வெளியே வரமுடியாத அளவு காற்று படுமோசமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தேசிய மாசு கட்டுப்பாட்டு ஆணையம்.

இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரை கட்டுமானங்களை நிறுத்தி வைப்பது, டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கத் தடை, செங்கல் சூளைகளை மூட வேண்டும், குப்பைகளை எரிக்கக் கூடாது, டெல்லி அருகிலுள்ள மாநிலங்களில் அறுவடைக்குப் பின் பயிர் கழிவுகளை எரிக்கக் கூடாது, மேலும் தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் 
 போன்ற பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

Trending News