திஸ் ஹசாரி மோதல்: 2 காவல் அதிகாரியை இடைநீக்கம் செய்ய HC உத்தரவு!

டிஸ் ஹசாரி மோதல் விவகாரத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவு..!

Last Updated : Nov 3, 2019, 07:57 PM IST
திஸ் ஹசாரி மோதல்: 2 காவல் அதிகாரியை இடைநீக்கம் செய்ய HC உத்தரவு! title=

டிஸ் ஹசாரி மோதல் விவகாரத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவு..!

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரையும் நியமித்துள்ளது.

நீதிமன்றத்தின் கட்டிடத்திற்குள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக ஒரு வழக்கறிஞருக்கும் சில காவலர்களுக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதத்தின் பின்னர் சனிக்கிழமை வன்முறை மோதல் வெடித்தது. இந்த மோதலில் கூடுதல் DCP உட்பட குறைந்தது 20 போலீசார் காயமடைந்தனர். மேலும் எட்டு வழக்கறிஞர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொலிசார் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் வன்முறையை தாங்கள் நாடியதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர், ஆனால் தங்களது தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., "ஒரு கூடுதல் DCP மற்றும் 2 SHO-க்கள் உட்பட இருபது காவலர்கள் காயமடைந்துள்ளனர். எட்டு வழக்கறிஞர்களும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ளனர். தீ விபத்தில் 12 தனியார் மோட்டார் சைக்கிள்கள், 1 QRT ஜிப்சி மற்றும் காவல்துறையின் 8 சிறை வேன்கள் சேதமடைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி காவல்துறை அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. மேலும், கலவரம் குறித்து 6 மாதத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க்கை நியமித்துள்ளது. திக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பெற்று புதிய FIR பதியவும், காயமடைந்த மூன்று வழக்கறிஞர்களுக்கு இழப்பீடு வழங்கவும் டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திங்கட்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. 

 

Trending News