அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, அனைத்து வகை மதுபானங்கள் வசூலிக்கப்பட்ட 70% ‘சிறப்பு கொரோனா கட்டணத்தை’ 2020 ஜூன் 10 முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.
வரி மோசடிகள் அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பை அடுத்து டெல்லி அரசாங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிடைக்கும் மதுபான விலைகள் கனிசமாக குறையும் எனவும் தெரிகிறது.
மதுபானங்களுக்கான "கோவிட் -19 வரி" ரத்தாகுமா? டெல்லி அரசு விளக்கம்...
முன்னதாக கடந்த மே 5 முதல், தேசிய தலைநகரில் உள்ள கெஜ்ரிவால் அரசாங்கம் மதுவுக்கு சிறப்பு கொரோனா கட்டணத்தை விதித்தது.
தவிர, இந்த கடைகளில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, ஒரு ஈ-கூப்பன் (e-coupon) முறையையும் அறிமுகம் செய்தது. இந்த கூப்பனானது ஒரு குறிப்பிட்ட தேதியிலும் நேரத்திலும் ஒரு குறிப்பிட்ட மதுபானக் கடையை பார்வையிட மக்களை அனுமதிக்கிறது.
e-token முறையில் மதுபானங்களை விற்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது...
கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலால் அரசாங்கத்தின் வருவாய் உருவாக்கம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மதுபான விற்பனையே கைகொடுத்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட மாநில அரசுகள் மதுபானங்கள் மீது கூடுதல் வரி வதித்து வருவாயை பெருக்கின, இந்நிலையில் தற்போது டெல்லி அரசு மது பானங்கள் மீது விதித்திருந்த கூடுதல் வரியை தற்போது திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.