Delhi Gang Rape: 30 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியர்கள்

Delhi Gang Rape: புது டெல்லி ரயில் நிலையத்தில் 30 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ரயிலே ஊழியர்கள்

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2022, 06:33 PM IST
  • கொடூரமான முறையில் தாக்கி பாலியல் பலத்காரம்
  • அறையின் கதவை பூட்டி பெண்ணை பாலியல் பலத்காரம் செய்துள்ளனர்.
  • குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Delhi Gang Rape: 30 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியர்கள் title=

புது டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து மீண்டும் வெட்கக்கேடான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதுடெல்லி ரயில் நிலையத்தில் 30 வயது பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே மின்சாரத்துறையில் பணிபுரியும் 4 ஊழியர்கள் சேர்ந்த கும்பல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை மிகவும் கொடூரமான முறையில் தாக்கி பாலியல் பலத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

தற்போது குற்றவாளிகள் 4 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அதிகாலை 2.30 மணியளவில் டெல்லி காவல்துறைக்கு போன் செய்து தனக்கு நடந்த அநீதியைக் குறித்து தெரிவித்துள்ளர். இதனையடுத்து அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் தேடி உள்ளனர். இறுதியாக புது தில்லி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண் 8 மற்றும் 9 இல் பாதிக்கப்பட்ட பெண் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஃபரிதாபாத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஒரு வருடமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பெண் தனது நண்பர் மூலம் ஒரு பையனை சந்தித்தார். தான் ரயில்வேயில் வேலை செய்வதாகவும், தனக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் அந்த பையன் கூறியுள்ளான். இதற்கிடையில் இருவரும் அடிக்கடி பேசியுள்ளனர். 

மேலும் படிக்க: மகன் செய்த பாலியல் வன்கொடுமைகளின் ஆதாரங்களை அழித்த அப்பாவுக்கும் தண்டனை

ஜூலை 21ம் தேதி, தான் புதிய வீடு வாங்கியதாகவும், அதனைக் கொண்டாடும் விதமாக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறிய அந்த வாலிபர், அந்த பெண்ணையும் அழைத்துள்ளார். இரவு 10.30 மணியளவில் மெட்ரோ மூலம் கிர்த்தி நகருக்கு அந்த பெண் வந்துள்ளார். அங்கிருந்த அந்த வாலிபர் புதுதில்லி ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 8-9க்கு அழைத்து வந்துள்ளர்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர், அந்த பெண்ணை மின்சாரத் துறை ஊழியர்களுக்கான அறையில் உட்காரச் சொல்லி உள்ளர். சிறிது நேரம் கழித்து அந்த வாலிபரும், அவனது நண்பர் ஒருவரும் அறைக்குள் வந்து கதவை உள்பக்கமாக பூட்டி அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். அதே சமயம் அவனது கூட்டாளிகள் இருவர் கதவுக்கு வெளியே காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த விஷயத்தை உடனடியாக அறிந்த போலீசார், IPC 376D/342 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நான்கு பேரும் ரயில்வேயில் மின்சாரத்துறை ஊழியர்கள். அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் புகாரின் பேரில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே டிசிபி ஹரேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் படிக்க: நம்பி வந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்: தஞ்சை அருகே கொடூரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News