புது டெல்லி: இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி துவாரகா பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தை கடுமையாக தாக்கினார். தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் டெல்லியில் இரண்டாவது பேரணியில் பங்கேற்ற பிரதமர் தேசியவாத பிரச்சினைகளை குறித்து பேசினார். டெல்லிக்கு மற்றவர்களை குற்றம் சாட்டும் அரசாங்கம் தேவையில்லை. நல்ல வளர்ச்சியை காட்டும் அரசாங்கம் தேவை என்று பிரதமர் கூறினார்.
வாக்களிப்பதற்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்பதை காட்டுகிறது என்று அவர் கூறினார். பிரதமர் மோடி தனது அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து அதிகமாக பேசும்போது, டெல்லியின் வளர்ச்சி பாதையில் கெஜ்ரிவால் அரசு தடையாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், பயங்கரவாத தாக்குதலின் போது இந்தியாவை பலவீனப்படுத்தும் ஒரு அரசு டெல்லிக்கு தேவையில்லை என்றும், அறிக்கைகள் மூலம் இந்தியாவைத் தாக்க எதிரிக்கு வாய்ப்பு அளிக்க நினைப்பவர்கள் டெல்லிக்கு தேவையில்லை என்றும் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஏழைகளுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டிய பிரதமர், டெல்லியில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களுக்கான வழியில் ஆம் ஆத்மி அரசு தடையாக உள்ளது என்று தெரிவித்தார். "சிந்தியுங்கள், ஏழைகளின் நலனை யார் விரும்புகிறார்கள், ஏழைகளுக்கு வேதனை அளிப்பவர்களா? ஏழைகளை அரசாங்கத்தின் திட்டங்களிலிருந்து பறிப்பாரா? எவ்வளவு அரசியல் எதிர்ப்பு இருந்தாலும், ஏழைகளின் நல்வாழ்வுக்கு ஏதேனும் தடையாக இருக்குமா? ஆனால் டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு இங்கே மறுக்கப்பட்டுள்ளன. இது பிப்ரவரி 11 க்குப் பிறகு மாற்றம் ஏற்படும் என்றார்.
பிரதமர் மோடி கூறுகையில், "டெல்லி ஏழைகளுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன் கிடைக்காதது யார் செய்த குற்றம்? பிரச்சினை 5 லட்சம் அல்ல. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் பயனாளியான டெல்லி குடிமக்கள் குவாலியர், போபால், சூரத், நாக்பூர், ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களுக்கு ஏதேனும் வேலைக்காகச் சென்று, அங்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால், இந்த மொஹல்லா கிளினிக் அங்கு வேலை செய்யுமா? அந்த [பகுதிகளில் இருக்கிறதா? ஆனால் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டிருக்கும், டெல்லியின் எந்தவொரு பயனாளியும் ஏதேனும் வேலைக்காக அங்கு சென்றிருப்பார், கடுமையான உடல்நலப் பிரச்சினையால் அவர் சிக்கியிருந்தால் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை கிடைத்திருக்கும். ஆனால் ஆம் ஆத்மி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த வில்லை. டெல்லியில் இதுபோன்ற ஒரு அரசாங்கம் உள்ளது. அது உங்கள் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவில்லைஎன்றார்.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் டெல்லி மக்களுக்கு சொந்த வீடு கிடைக்கவில்லை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து, ஏழைகளுக்கு கூட வாழ ஒரு வீடு கிடைக்க வேண்டுமா, வேண்டாமா? நீங்கள் ஒரு சொந்த வீட்டைப் பெற வேண்டுமா இல்லையா? ஆனால் ஏழைகளுக்கு வீடு கிடைக்கும் திட்டத்தை தடுக்க ஒரு கட்சி இருக்க முடியுமா, இந்தத் திட்டத்தில் கூட தடைகள் கொண்டு வரும் ஒரு தலைவர் இருக்க முடியுமா? ஏழைகளிடம் இவ்வளவு எதிர்மறையாக சிந்தித்திருக்க வேண்டிய ஒரு வக்கிரமான மனநிலை கொண்டவர்கள் தான் டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் எனக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.