டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020: முக்கியமான தேதிகள் மற்றும் எண்கள்

13,750 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) சுனில் அரோரா தெரிவித்தார்.

Last Updated : Jan 6, 2020, 05:51 PM IST
டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020: முக்கியமான தேதிகள் மற்றும் எண்கள் title=

13,750 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) சுனில் அரோரா தெரிவித்தார்.

டெல்லியில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான முழு அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) திங்கள்கிழமை அறிவித்தது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி ஜனவரி 6, 2020 நிலவரப்படி டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,46,92,136 பதிவு செய்யப்பட்டுள்ளனர். 13,750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்னர் ஒரு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது டெல்லி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 இன் முக்கியமான தேதிகள் இங்கே:-

Date of issue of Gazette notification: January 14

Last Date for filing nominations:  January 21

Date for scrutiny of nominations:  January 22

Date of withdrawal of nomination: Janaury 24

Date of election: February 8

Date of counting: February 11

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020: எண்ணிக்கையில்:-

பொது வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை: 1,46,92,136
சேவை வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை: 11,556
வரைவு தேர்தல் பட்டியலின் படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,47,03,692
மொத்த வாக்குச் சாவடிகள்: 13,750
கருத்துக் கணிப்புக்கான போலீசாரின் எண்ணிக்கை: 90,000

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News