ரபேல் விமானம் 9% குறைந்த விலையில் ஒப்பந்தம் :நிர்மலா சீதாராமன் விளக்கம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2018, 06:54 PM IST
ரபேல் விமானம் 9% குறைந்த விலையில் ஒப்பந்தம் :நிர்மலா சீதாராமன் விளக்கம் title=

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல கோடி ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 540 கோடிக்கு இருந்த ஒப்பந்தம் எப்படி பிஜேபி ஆட்சியில் ரூ. 1600 கோடியாக மாறியது என கேள்வி எழுப்பி வருகிறது காங்கிரஸ். 

இதற்க்கு பாஜக தரப்பில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைக்கேடும் நடக்கவில்லை என்று பல பிஜேபி தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அவர், 

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிர்ணிக்கப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது ஒன்பது சதவிகிதம் குறைந்த விலையில் ரஃபேல் விமானம் ஒப்பந்தத்தை நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் போடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு உண்மை இல்லை எனக் கூறினர். 

அடுத்த வருடம் நடைபெற உள்ள பொது தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையே நல்ல போட்டி இருக்கும். ஆனாலும் பிஜேபி அதிக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார்.

Trending News