பிரிக்ஸ் மாநாடு: எஸ்-400 ட்ரையும்ப் ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளது

Last Updated : Oct 15, 2016, 09:54 AM IST
பிரிக்ஸ் மாநாடு: எஸ்-400 ட்ரையும்ப் ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளது title=

ரஷியாவின் எஸ்-400 ட்ரையும்ப் ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது 

பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்திக்கின்றன. இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.  ஏற்கனவே 400 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் அதிநவீன எஸ்-400 ட்ரையும்ப் ஏவுகணையை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து இருந்தது. 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா - ரஷியா இடையே கையெழுத்து இன்று ஆகும் எனத்தெரிகிறது..  
 
அதிநவீன எஸ்-400 ட்ரையும்ப் ஏவுகணைகள் இந்தியா ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்கும். இது மறைந்திருந்து தாக்கி எதிரிகளின் அத்தனை இலக்குகளையும் ஒரே நேரத்தில் அழிக்கும் வல்லமை படைத்தது. நம்மை நோக்கி சீறிவரும் எந்த ஏவுகணையையும் வழிமறித்து அழிக்கும் வல்லமையும் இதற்கு உண்டு. இதன் ரேடார்கள் மிகவும் சக்தி படைத்தவை.

Trending News